சிறீலங்கா சுகாதாரத்துறை எச்சரிக்கை!

You are currently viewing சிறீலங்கா சுகாதாரத்துறை எச்சரிக்கை!

கொரோனா வைரஸ் காரணமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுவரும் அதேவேளை வைரசினை கண்டுபிடித்து கட்டுப்படுத்துவதற்கான போதிய சோதனை நடவடிக்கைகள் இலங்கையில் இல்லாதது குறித்து சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

போதியளவு சோதனை நடவடிக்கைகள் இடம்பெறாமையே முக்கியமான விடயமாக காணப்படுவதாக முக்கிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நாட்டைமீள திறப்பதால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை மதிப்பிடுவதற்காக மேற்கொள்ளவேண்டிய சோதனைகளின் எண்ணிக்கையை விட இலங்கையில் குறைந்தளவு சோதனைகளே இடம்பெற்றுள்ளன என முக்கிய சுகாதார அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் பொருளாதார நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் 500,000 பேரிற்காவது சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக முடக்கல் நிலையை தளர்த்துவதற்கான காலம் இன்னமும் வரவில்லை என அவர் எச்சரித்துள்ளனர்.
விஞ்ஞானரீதியிலான நடைமுறைகளை பின்பற்றாமல் கட்டுப்பாடுகளை தளர்த்துவதால் ஏற்படக்கூடிய இரண்டாவது சுற்று வைரசினை, தவிர்ப்பதற்காக தீவிரமான சோதனை நடவடிக்கைகள் அவசியம் என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள