சிறுவயதினரிடையே அதிகளவில் பரவும் பிறழ்வடைந்த “கொரோனா” வைரஸ்!

You are currently viewing சிறுவயதினரிடையே அதிகளவில் பரவும் பிறழ்வடைந்த “கொரோனா” வைரஸ்!

பிரித்தானியாவில் கண்டறியப்பட்டதாக அடையாளப்படுத்தப்படும், பிறழ்வடைந்த “கொரோனா” வைரஸ், பெரியவர்களில் பார்க்க சிறுவயதினரிடையே அதிவிரைவாக பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“Imperial College London” என்ற பிரித்தானிய அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையொன்றில் இது தெளிவு படுத்தப்பட்டுள்ளதாகவும், பெரியவர்களைவிட, 0 இலிருந்தது 19 வரையிலான வயதுடையவர்களிடையே இப்பிறழ்வடைந்த “கொரோனா” வைரஸ் விரைவாக பரவுவதாகவும் அறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

  1. 20 வயதுக்கும் குறைந்தவர்களிடையே இப்பிறழ்வடைந்த வைரஸ் பரவுவதற்கு உயிரியல் கரணங்கள் இருக்கலாமெனவும்…
  2. “கொரோனா” பாதிப்பால் நாடுகள் முடக்க நிலையில் இருந்தாலும், பாடசாலைகள் வழமைபோல் இயங்கியதால் இளவயதினரிடையே இது அதிகரித்திருக்கலாமெனவும்…
  3. வழக்கமாகவே இளவயதினரிடையே தொற்றுக்கான அறிகுறிகள் விரைவாக வெளிப்படுவதால், அதிகளவிலான இளவயதினர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதால், பாதிக்கப்படும் இயவயதினரின் தொகை அதிகரித்திருக்கலாமெனவும்…

கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.

பகிர்ந்துகொள்ள