சீனாவின் போர் ஒத்திகைக்கு இதுதான் காரணம்!

You are currently viewing சீனாவின் போர் ஒத்திகைக்கு இதுதான் காரணம்!

தைவான் மீதான படையெடுப்பை முன்னெடுக்கவே டசின் கணக்கான போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களுடன் சீனா போர் ஒத்திகையை நடத்தி வருவதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது. தைவானுக்கு அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி சென்று திரும்பிய நிலையிலேயே 20 போர் விமானங்கள் மற்றும் 14 போர்க்கப்பல்களுடன் சீனா போர் ஒத்திகையை முன்னெடுத்தது.

இதனையடுத்து, தைவானின் பாதுகாப்புத்துறை அவசர எச்சரிக்கை விடுத்ததுடன், நாட்டைச் சுற்றி கண்காணிப்பை தீவிரப்படுத்தியது. மட்டுமின்றி நிலத்தில் இருந்து தாக்கக்கூடிய ஏவுகணை அமைப்பையும் தயார் நிலையில் வைத்துக் கொண்டது.

சீனாவின் இந்த நடவடிக்கையானது உக்ரைனுக்கு ஏற்பட்டது போன்றது என குறிப்பிட்டுள்ள தைவான் இராணுவம், சீனாவை சீண்டும் எண்ணம் தைவானுக்கு எப்போதும் இல்லை எனவும், ஆனால் தாக்குதலை முன்னெடுத்தால் தங்களை தற்காத்துக் கொள்ளும் வலிமை இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

சீனாவுக்கும் தைவானுக்குமான எல்லைக் கோடானது 1955ல் அமெரிக்க தளபதி ஒருவர் கட்டமைத்ததாகும். குறித்த எல்லைக் கோட்டை சீனா போர் ஒத்திகை என்ற பெயரில் மீறியுள்ளது.

இது உண்மையில் கண்டனத்துக்குரிய செயல் என தைவான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தைவானின் வடக்கு, தென்மேற்கு மற்றும் கிழக்கில் உள்ள கடல் மற்றும் வான்வெளிகளில் திட்டமிட்டபடி ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது.

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தனது ஆசிய பயணத்தின் ஒருபகுதியாக தைவானுக்கு செவ்வாய்க்கிழமை பயணம் மேற்கொண்டார். இப்பயணத்தின் மூலம் 25 ஆண்டுகளுக்கு பிறகு தைவானுக்குச் சென்ற அமெரிக்க உயர் அதிகாரி என்ற பெருமையை நான்சி பெலோசி பெற்றார்.

நான்சியின் இப்பயணத்துக்கு சீனா கடும் அதிருப்தியை தெரிவித்தது. சீனாவின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுகிறது என்றும் சீனா கொந்தளித்தது.

தொடர்ந்து, நான்சியின் வருகை காரணமாக தைவான் எல்லைக்கு அருகே சீனா அதிநவீன ஏவுகணையை ஏவி போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறது. சீனாவின் இந்த போர் ஒத்திகை ஞாயிற்றுக்கிழமைவரை நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments