சீனாவில் 16 தற்காலிக மருத்துவ மனைகள் மூடப்படுகின்றன!

  • Post author:
You are currently viewing சீனாவில் 16 தற்காலிக மருத்துவ மனைகள் மூடப்படுகின்றன!

சீனாவில் கொரோனாவால் வைரசால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக கட்டப்பட்ட 16 தற்காலிக மருத்துவமனைகளை மூட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதற்கென கட்டப்பட்ட 16 தற்காலிக மருத்துவமனையை மூட சீன அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஹூபே மாகாணத்தின் வுஹானில் அமைக்கப்பட்டிருந்த 2 தற்காலிக மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து மொத்தம் 16 தற்காலிக மருத்துவமனைகளை அரசு மூடியுள்ளது.

முன்னதாக உச்சாங் ஹாங்ஷான் என்ற விளையாட்டு மைதானமானது கடந்த மாதம் 5-ம்தேதி தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டது. அதில் 784 படுக்கைகள் அமைக்கப்பட்டன. மொத்தம் 1,124 பேர் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அவர்களில் 833 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும் வுஹானில் அமைக்கப்பட்டிருந்த உச்சாங் தற்காலிக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 49 பேர் இன்று வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து, மருத்துவமனை மூடப்பட்டது.

மீதமுள்ள 291 பேர் மற்ற மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருவது மற்றும் கொரோனா வைரசின் தாக்கம் கட்டுக்குள் கொண்டுவரபட்டுள்ளது அந்நாட்டு மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

பகிர்ந்துகொள்ள