சீனாவுக்கான வழிகளை திறந்துவிடும் அமெரிக்கா மற்றும் நேட்டோ!

You are currently viewing சீனாவுக்கான வழிகளை திறந்துவிடும் அமெரிக்கா மற்றும் நேட்டோ!

அமெரிக்கா மற்றும் நேசநாடுகளின் கூட்டமைப்பான “நேட்டோ” ஆகியன, இதுவரை காலமும் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த இடங்களில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்ளும் நிலையில், அவ்விடங்களில் சீனா தனது நிலைகளை பலப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக, ஆப்கனிஸ்தானில் இருந்து அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் விலகி வரும் நிலையில், ஆப்கனிஸ்தானை மீண்டும் “தலிபான்”கள் கையகப்படுத்தும் நிலை தோன்றியிருப்பதாகவும், அதேவேளை, தற்கால அரசியல் நிலைப்பாடாக தலிபான்கள் சீன சார்பு நிலையை எடுத்திருப்பதால் சீனாவின் உறுதியான நிலையெடுப்பு ஆப்கனிஸ்தானில் வருவதை தடுக்க முடியாதெனவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

முன்னைய காலங்களில் அன்றைய “சோவியத் ஒன்றியம்”மிக நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்த அன்றைய ஆப்கனிஸ்தானை, சோவியத் ஒன்றியத்தின் தொடர்பிலிருந்து துண்டிப்பதற்காக, “தலிபான்கள்” அமைப்பை உருவாக்கி, அன்றைய ஆப்கனிஸ்தானை தம்வசப்படுத்திக்கொண்ட அமெரிக்காவும், நேட்டோவும், பின்னர் தாங்கள் உருவாக்கிய அதே தாலிபான்களை அழிப்பதற்காக தங்கள் படைகளை ஆப்கனிஸ்தானில் நிலைகொள்ள வைத்திருந்ததும், நீண்ட நெடுங்காலமாக தொடர்ந்துவந்த இந்நிலை தோல்விகண்டபின் இப்போது அங்கிருந்து அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் வெளியேற வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளின் பின்வாங்கலையடுத்து, ஆப்கனிஸ்தானின் 90 சதவிகிதமான இடங்களின் கட்டுப்பாட்டை தமது படைகள் கட்டுக்குள் கொண்டுவந்திருப்பதாக தலிபான்கள் அறிவித்துள்ள நிலையில், இதுவரை காலமும் அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளோடு இணைந்து பணியாற்றிய ஆப்கனியர்களும் ஆப்கனிஸ்தானை விட்டு வெளியேறி வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, நேட்டோ படைகளோடு மிக நெருக்கமாக பணியாற்றி, உளவு சொல்லிவந்த ஆப்கனியர்களுக்கு அரசியல் அடைக்கலம் கொடுக்க நோர்வே போன்ற நாடுகள் முன்வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஆப்கனிஸ்தானில் சீனாவும் தனது தளங்களை பலப்படுத்துவதற்கு ஏதுவாக, தாலிபான்களோடு சமரசம் செய்துகொண்டுள்ளதோடு, அங்கு தனது ஆதிக்கத்தையும் பலப்படுத்திவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments