சீனாவை முந்திய அமெரிக்கா! “கொரோனா” அதிர்வுகள்!!

You are currently viewing சீனாவை முந்திய அமெரிக்கா! “கொரோனா” அதிர்வுகள்!!

“கொரோனா” தொற்றினால் அமெரிக்காவில் அதிகளவான மக்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

31.03.20 அன்றைய நிலவரப்படி, அமெரிக்காவில் 3573 பேர் மரமடைந்துள்ளதாகவும், இதன்படி சீனாவை விடவும் அதிக மரணங்களை சந்தித்துள்ள நாடாக அமெரிக்கா மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எதிர்பார்த்திராத அவலங்களை சந்திப்பதத்திற்கு அமெரிக்க மக்கள் தயாராக இருக்கவேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளதோடு, அதிகமான உயிரிழப்புக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

“கொரோனா” அனர்த்தங்களை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு அனர்த்த முகாமைத்துவ குழுவினரோடு வெள்ளை மாளிகையில் தொடர் சந்திப்புகளை நடத்திவரும் அமெரிக்க அதிபர், எதிர்வரும் வாரங்கள் அமெரிக்க மக்களுக்கு மிகுந்த வலிகளை கொடுக்கும் வாரங்களாக அமையுமெனவும், “கொரோனா” வுக்கெதிரான போரில், நாட்டு மக்களை அனைவரும் ஒன்று சேர்ந்து ஒத்துழைக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

சீனாவை முந்திய அமெரிக்கா!

அமெரிக்காவில் தற்போது நடைமுறையிலுள்ள முன்னேற்பாட்டு விதிகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமென தெரிவித்துள்ள, அமெரிக்க அதிபரின் அனர்த்த முகாமைத்துவ குழுவின் தலைவர் “Deborah Birx”, விதிகளை பின்பற்றாவிட்டால், அமெரிக்கா முழுவதும் சுமார் 2.2 மில்லியன் மக்கள் மரணமடையும் ஆபத்து இருக்கிறதெனவும், எதுவாயினும் தற்போதுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டிருந்தாலும், ஒரு இலட்சத்திலிருந்து இரண்டு இலட்சத்து நாற்பதினாயிரம் மரணங்கள் வரை ஏற்படுவது தவிர்க்க முடியாதது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள