சுவீடன், பின்லாந்து நாடுகளுக்குள் நேட்டோவின் ஆயுதங்கள் நுழைந்தால் கடும் நடவடிக்கை! எச்சரிக்கும் ரஷ்யா!!

You are currently viewing சுவீடன், பின்லாந்து நாடுகளுக்குள் நேட்டோவின் ஆயுதங்கள் நுழைந்தால் கடும் நடவடிக்கை! எச்சரிக்கும் ரஷ்யா!!

நேட்டோ கூட்டமைபில் சுவீடனும், பின்லாந்தும் இணைவதற்கு ஆரம்பத்திலிருந்தே கடும் எதிர்ப்பை வெளியிட்டு வந்த ரஷ்யா, இப்போது, மேற்படி இரு நாடுகளும் நேட்டோ கூட்டமைப்பில் இணையும் சாத்தியங்கள் அதிகமாகி வருவதையடுத்து மீண்டும் கடுமையான எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.

சுவீடன், பின்லாந்துக்குள் நேட்டோவின் இராணுவத்தளபாடங்கள் நுழைந்தால், ரஷ்யா அதற்கெதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என எச்சரிக்கை விடுத்திருக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், நிலைமையை மேன்மேலும் கடுமையாக்கும் நேட்டோவின் நடவடிக்கைகள், சுவீடன், பின்லாந்து நாடுகளுக்கும் விரிவடைந்து, அந்த நாடுகளிலும் நேட்டோவின் இராணுவ நிலைகள் நிலைநிறுத்தப்படுமானால், சமச்சீரான நடவடிக்கைகளின் மூலம் நேட்டோவுக்கு பதில் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, நேட்டோவில் இணைந்துகொள்வதில் அதிக ஆர்வம் காட்டாத சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளுக்கு, நேட்டோவும், அமெரிக்காவும் தொடர்ச்சியாக கொடுத்துவந்த அழுத்தங்களே இவ்விரு நாடுகளையும் நேட்டோவில் இணையயும் முடிவிற்கு தள்ளின என்பதோடு, இவ்விரு நாடுகளின் மக்கள் பெரும்பாலும் ரஷ்யாவுடன் பகையை வளர்த்துக்கொள்ளும் நிலைக்கு தங்கள் நாடுகள் எவ்விதமான நகர்வுகளையும் மேற்கொள்ளக்கூடாது எனவே எதிர்பார்ப்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, சுவீடனை பொறுத்தவரை, அந்நாடு நேட்டோவில் இணையும் முடிவை எடுத்தால், அரசுக்கெதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும் நிலை இருப்பதாகவும், அதன்மூலம் அரசு பதவியிழக்கும் ஆபத்தும் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments