செப்டம்பர் முதல் வாரத்தில் ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை!

You are currently viewing செப்டம்பர் முதல் வாரத்தில் ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை!

செப்டம்பர் பத்தாம் திகதிக்கு ஓரிரு நாட்களிற்கு முன்னர் மனித உரிமை ஆணையாளரின் நகல் அறிக்கையை ஜெனீவாவில் உள்ள இலங்கை பிரதிநிதிகளுடன் பகிர்ந்துகொள்வதற்கு முங்கொவன் இணங்கியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51வது அமர்விற்கு முன்னதாக கடந்த செவ்வாய்கிழமை இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள மனித உரிமை பேரவையின் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் ரொரி முங்கொவனையும் ஏனையவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்.

தற்போதைய பொருளாதார வீழ்ச்சி மற்றும் அதனால் ஏற்பட்ட அரசியல் எழுச்சி காரணமாக மோதல்போக்கை பின்பற்றுவதில்லை என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தினார்.

தேசிய இறைமை மற்றும் அரசமைப்பு மட்டுப்பாடுகள் காரணமாக பொறுப்புக்கூறல் விவகாரங்களிற்கு தீர்வை காண்பதற்காக கலப்பு பொறிமுறைகளை ஏற்படுத்துவதில் தடைகள் காணப்படுவதாக அலி சப்ரி தெரிவித்தார்.

இதே காரணங்களால் காணப்படும் கட்டுப்பாடுகளால் இராணுவ அரசியல் தலைமைக்கு எதிரான ஆதாரங்களை சேகரித்து பாதுகாக்கும் சர்வதேச பொறிமுறைக்கு அரசாங்கத்தினால் ஆதரவை வழங்கமுடியாது எனவும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

46/1 தீர்மானம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டால் அது குறித்து வாக்களிப்பை கோருவதை தவிர அரசாங்கத்திற்கு வேறு வழியில்லை என அலி சப்ரி மிகவும் இராஜதந்திர வழியில் தெரிவித்தார் என இராஜதந்திர வட்டாரமொன்று தெரிவித்துள்ளது.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் உள்ளவர்கள் உட்பட அரசாங்கத்தினால் பயங்கரவாத தடைச்சட்டத்தினை சட்ட அமுலாக்கல் அதிகாரிகள் பயன்படுத்தமாட்டார்கள் என்ற பகிரங்க அறிவிப்புகள் வெளியிடப்பட்டன என்பதை சுட்டிக்காட்டிய முங்கொவன் சர்வதேச சமூகத்தின் கரிசனைகள் காரணமாக புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.

எனினும் தற்போது கைதுகளை மேற்கொள்வதற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்தப்படுவதாக அறிகின்றோம் என தெரிவித்தார்.

1970-80 ஜேவிபி கிளர்ச்சி குறித்து வெளிவிவகார அமைச்சர் தெரிவித்ததையும் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள மனித உரிமை பேரவையின் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் ரொரி முங்கொவன் சுட்டிக்காட்டியுள்ளார்.

46/1தீர்மானத்தை அடிப்படையாக கொண்ட தற்போதைய கரிசனைகளை விவகாரங்களை உள்ளடக்கிய தீர்மானமொன்று குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்படும் எனவும் முங்கொவன் தெரிவித்துள்ளார்.

அது 51 அமர்வில் புதிய தீர்மானத்தின் வடிவில் வெளியாகும். இலங்கை குறித்த தீர்மானத்திற்கு அனுசரனை வழங்கும் நாடுகள் புதிய வரைபு குறித்து ஆராய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

செப்டம்பர் பத்தாம் திகதிக்கு ஓரிரு நாட்களிற்கு முன்னர் மனித உரிமை ஆணையாளரின் நகல் அறிக்கையை ஜெனீவாவில் உள்ள இலங்கை பிரதிநிதிகளுடன் பகிர்ந்துகொள்வதற்கு முங்கொவன் இணங்கியுள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments