ஜப்பானில் மன்னர் பிறந்த நாள் கொண்டாட்டம் ரத்து : வைரஸ் அச்சுறுத்தல்!

  • Post author:
You are currently viewing ஜப்பானில் மன்னர் பிறந்த நாள் கொண்டாட்டம் ரத்து : வைரஸ் அச்சுறுத்தல்!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஜப்பானில் மன்னர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரானா வைரஸ் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், ஜப்பானில் மன்னர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.  ஜப்பானில் வழக்கமாக அந்நாட்டின் மன்னர் பிறந்த நாள் பிரம்மாண்டமாக கொண்டாடப்படுவது வழக்கம். ஜப்பான் மக்கள் வீதிகளில் பெருமளவில் கூடி மன்னரின் பிறந்த நாளை கொண்டுவர்.

ஆனால், நிகழாண்டு, மன்னர்  நருஹிட்டோ பிறந்த நாள் கொண்டாட்டம் ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஜப்பானில் கொரோனா வைரசால் ஒருவர் உயிரிழந்துள்ளனர். 414 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

பகிர்ந்துகொள்ள