ஜி20 மாநாடு: தமிழகம் வரத்தொடங்கிய வெளிநாட்டு பிரதிநிதிகள்!

You are currently viewing ஜி20 மாநாடு: தமிழகம் வரத்தொடங்கிய வெளிநாட்டு பிரதிநிதிகள்!

இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் ஜி20 மாநாடு தொடர்பான கூட்டங்கள் நடந்து வருகின்றன. சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 3-ந் தேதி வரை நடக்கும் ஜி20 மாநாடு தொடர்பான கூட்டத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். சென்னையில் தரமணி ஐ.ஐ.டி. ஆராய்ச்சி மையம், மாமல்லபுரம், சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இதையடுத்து சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு, உள்நாட்டு முனையங்களில் இந்த கூட்டத்தில் பங்கேற்க வரும் வெளிநாட்டு பிரதிநிதிகளை வரவேற்க மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தனி பாதை அமைக்கப்பட்டு உள்ளது.

வருகை பகுதியில் ‘வெல்கம் டூ சென்னை’ என ‘செல்பி’ புகைப்பட பகுதி, வெளிநாட்டு பிரதிநிதிகளுக்காக குடியுரிமை, சுங்க பகுதிகள் என சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்திய, தமிழக கலாசார ஓவியங்களும், அலங்கார வளைவுகளும் வைக்கப்பட்டு உள்ளன. 5 அடுக்கு பாதுகாப்பு சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளதால் சென்னை விமான நிலையம் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

விமான நிலையம் வரும் வாகனங்கள் பலத்த சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். கூட்டத்தில் பங்கேற்க நேற்று முதல் வெளிநாட்டு பிரதிநிதிகள் சென்னை வரத்தொடங்கினர். வெளிநாட்டு பிரதிநிதிகளை வரவேற்க தமிழ் கலாசார நடனங்கள் நடத்தப்பட்டன. மேலும் வெளிநாட்டு பிரதிநிதிகளை அழைத்து செல்ல தனியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதையொட்டி சென்னை விமான நிலையம் முழுவதும் வண்ண வண்ண மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments