ஜூலை 1 முதல், மீண்டும் வெளிநாடுகளுக்கு பறக்கவுள்ளது NORWEGIAN!

  • Post author:
You are currently viewing ஜூலை 1 முதல், மீண்டும் வெளிநாடுகளுக்கு பறக்கவுள்ளது NORWEGIAN!

உள்நாட்டு மற்றும் ஐரோப்பாவின் பிற நாடுகளுக்கு ஜூலை 1 முதல் Norwegian 76 வழித்தடங்களை மீண்டும் திறக்கவுள்ளது. ஆனால், விமானங்கள் கடுமையான தொற்று கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டே பறக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

லண்டன், பாரிஸ், பார்சிலோனா மற்றும் கண்டத்தின் தெற்கே உள்ள நோர்வே மக்கள் கூடுதலாக விரும்பி பயணிக்கும் ஐரோப்பாவின் பல இடங்களுக்கும் விமானங்களை பறக்கவிடவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

உள்நாட்டிலும் Norwegian இப்போது தனது பறப்புகளை விரிவுபடுத்துகின்றது. ஜூலை 1 முதல் Svalbard உட்பட பன்னிரண்டு நகரங்களுக்கு விமான சேவையை Norwegian விரிவுபடுத்தவுள்ளது.

தற்போழுது Norwegian, நோர்வேயில் எட்டு விமானங்களை சேவையில் பயன்படுத்தி வருகின்றது. மேலும் பன்னிரண்டு விமானங்கள் சேவையில் சேர்க்கப்படும்போது, ​​நோர்வேயில் 600 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கங்களிலிருந்து திரும்பி மீண்டும் பணிக்கு வருவார்கள் என்றும், மொத்தமாக, 900 க்கும் மேற்பட்ட விமானிகள் மற்றும் சேவை குழுவினர் மீண்டும் பணிக்கு வருவார்கள் என்றும் Norwegian இன்று புதன் காலை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

விரைவில், ஒஸ்லோவிலிருந்து பயணிகள் Alicante, Praha, Mallorca, Riga மற்றும் Las Palmas ஆகிய இடங்களுக்குச் செல்லலாம். மேலும், விமான சேவையானது Gardermoen விமான தளத்திலிருந்து 46 வழித்தடங்களைக் கொண்டிருக்கும் என்றும் அவற்றில் 33 சேவைகள் வெளிநாடுகளுக்கு செல்லும் என்றும் மேலும் கூறப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்: TV2

பகிர்ந்துகொள்ள