ஜெனிவாவில் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் கவனயீர்ப்பு!!

You are currently viewing ஜெனிவாவில் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் கவனயீர்ப்பு!!

ஜெனிவாவில் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் கவனயீர்ப்பு மற்றும் தமிழின அழிப்பு ஆதாரநிழற்படக் காட்சிப்படுத்தல்.

செப்டெம்பர் முதலாம் திகதி பிரான்சுப் பாராளுமன்ற முன்றலில் ஆரம்பித்த நீதிக்கான பயணம் செப்டெம்பர் 11ஆம் திகதி ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை முன்றலை சென்றடைந்ததைத் தொடர்ந்து ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை போன்றவற்றை நோக்கி கவனயீர்ப்பு மற்றும் தமிழின அழிப்பு ஆதார நிழற்படக் காட்சிப்படுத்தலை தொடர்ச்சியாக செய்துவருகின்றனர். 

 14/09/2021 செவ்வாய்க்கிழமை மற்றும்  15/09/2021 புதன் கிழமை ஆகிய இரண்டு தினங்களும் தமிழ் மக்களை திட்டமிட்டு இனவழிப்பு செய்துவரும் சிறிலங்கா அரசாங்கத்தை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தி அனைத்துலக சுயாதீன விசாரணை நடாத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையோடு ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை (முருகதாசன் திடல்) முன்றலில் கவனயீர்ப்பு மற்றும் தமிழின அழிப்பு ஆதாரநிழற்படக் காட்சிப்படுத்தல் நடைபெற்றது. 

தொடர்ந்து ஜெனிவாவில் அமைந்துள்ள வெளிநாட்டு தூதரகங்கள் ,நகரசபைகள் மற்றும் முக்கிய அரசியல் மையங்களுடன் தொடர் அரசியல் சந்திப்புகளையும் நீதிக்கான பயணக் குழு மேற்கொள்ளவுள்ளது.

ஜெனிவாவில் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் கவனயீர்ப்பு!! 1
ஜெனிவாவில் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் கவனயீர்ப்பு!! 2
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments