ஜெனிவா ஐ .நா சபை முன்றல் முன் ​பட்டொளி வீசி பறக்கும் தமிழீழத்தேசியக்கொடி -காணொளி

You are currently viewing ஜெனிவா ஐ .நா சபை முன்றல் முன் ​பட்டொளி வீசி பறக்கும் தமிழீழத்தேசியக்கொடி -காணொளி

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 52 ஆவது கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில்,தமிழின அழிப்பினை மேற்கொண்ட சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றப் பொறிமுறையூடான நீதியினையும் தமிழர்களுக்கு தமிழீழமே இறுதியான தீர்வு என்பதனையும் வலியுறுத்தி 06.03.2023  இன்று பி.ப 2:00 மணியளவில் ,சுவிஸ் ஜெனிவாவில் அமைந்துள்ள   ஐக்கிய நாடுகள் சபை முன்றலில்    (ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில்) உணர்வெழுச்சியுடன் கவனயீர்ப்பு போராட்டம்  ஆரம்பமாகியது

இதன் போது  ஜெனிவா ஐ  நா சபை முன்றலில்   அணிதிரண்ட தமிழர்கள்   சர்வதேசத்திடம்   தமிழர்களின்  தாயகம் ,தேசியம் ,தன்னாட்சியுரிமை அடிப்படையிலான   தமிழீழ  தனியரசு ஒன்றே  எமக்கு  வேண்டும்  என்றும் , தமிழர்களின் தாயகம் தமிழீழம்  என்றும்  மேலும் தமிழீழத்தேசியக்கொடியை   ஏற்றி  சர்வதேசத்திடம்   தமிழர்களுக்கு  தமிழீழ   தனியரசு ஒன்றே தீர்வு என்பதை   உறுதியுடன்  எடுத்தியம்பினார்கள்

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments