ஜோ பைடன், கமலா ஹாரிஷ் பதவி ஏற்பு விழாவில் கோலங்கள் காட்சிப்படுத்தப்படும்!

You are currently viewing ஜோ பைடன், கமலா ஹாரிஷ் பதவி ஏற்பு விழாவில் கோலங்கள்  காட்சிப்படுத்தப்படும்!

அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் 20-ந் தேதி அவர் பதவியேற்க உள்ளார்.
இந்த தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய டிரம்ப் தொடக்கத்தில் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளாமல் பிடிவாதமாக இருந்து வந்தார்.


இதற்கிடையில், தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனுக்கு வெற்றி சான்றிதழ் அளிப்பதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டம் கடந்த 6-ம் தேதி நடைபெற்றது.
அப்போது நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்த டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். 

இந்த வன்முறையில் காவல்த்துறை அதிகாரி உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்டோரை அமெரிக்க மத்திய புலனாய்வு போலீசார் கைது செய்துள்ளனர்.‌ மேலும் நூற்றுக்கணக்கானோர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.‌
இதனிடையே ஜோ பைடனின் பதவியேற்பு விழாவும் நாடாளுமன்ற கட்டிடத்தில் தான் நடைபெற உள்ளது.
மேலும் ஜோ பைடன் பதவியேற்பு விழாவின் போதும் நாடாளுமன்றத்தில் ஆயுதம் ஏந்திய நபர்கள் தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்க உளவு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து நாடாளுமன்ற கட்டிடம் முழுவதுமே பாதுகாப்பு படையினரின் முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க பார்லிமென்ட் கட்டடத்தின் முகப்பில், டைல்ஸ் களை பயன்படுத்தி அமெரிக்கவாழ் இந்தியர்கள், பிரமாண்ட கோலங்களை உருவாக்கி உள்ளனர். எனினும் பாதுகாப்பு காரணங்களுக்காக அவற்றை அங்கு வைக்க அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. எனவே பதவியேற்பு விழாவின் துவக்கத்தில் ஒளிபரப்பப்படும் காணொலி காட்சியில் இந்த கோலங்கள் காட்சிப்படுத்தப்படும் என விழாவின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்து உள்ளனர்.  அமெரிக்கா முழுதும் இருந்து 1,800க்கும் அதிகமானோர் இணைந்து உருவாக்கி உள்ளனர்.


.அமெரிக்காவில், துணை அதிபராக பதவியேற்க இருக்கும் முதல் பெண் என்ற பெருமையை பெற இருக்கும்,  தமிழ் வம்சாவளியான கமலா ஹாரிசுக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி சோனியா சோடோமேயர், பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். 

பகிர்ந்துகொள்ள