டி20 பெண்கள் உலகக் கோப்பை : 5வது முறையாக வென்றது ஆஸ்திரேலியா!

  • Post author:
You are currently viewing டி20 பெண்கள் உலகக் கோப்பை : 5வது முறையாக வென்றது ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியா – இந்தியா இடையேயான டி20 பெண்கள் உலகக் கோப்பை துடுப்பாட்ட இறுதிப்போட்டியில் 85 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா.

பெண்களுக்கான 7-வது 20 பந்து பரிமாற்ற உலக கோப்பை துடுப்பாட்ட போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் 21-ந் தேதி தொடங்கியது.10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் இந்தியாவும், நடப்பு வெற்றியாளர் ஆஸ்திரேலியாவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இந்தநிலையில் மகளிர் உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டி இன்று ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் 12.30 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் நாணய சுழட்சியில் வென்ற ஆஸ்திரேலிய அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய மகளிர் அணி 20 பந்து பரிமாற்றத்தில் 4 இலக்குகள் இழப்புக்கு 184 ஓட்டங்கள் எடுத்தது. இதனையடுத்து 185 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணி 19.1 பந்து பரிமாற்றத்தில் அனைத்து இலக்குகளையும் இழந்து 99 ஓட்டங்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

ஆஸ்திரேலிய மகளிர் அணியில் அதிகபட்சமாக பெத் முனி 78, ஹீலி 75 ஓட்டங்கள் எடுத்தனர். இந்திய மகளிர் அணியில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 33, வேதா 19, ரிச்சா கோஷ் 18 ஓட்டங்கள் எடுத்தனர். இந்திய மகளிர் அணியில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 2 , பூனம், ராதா தலா ஒரு இலக்கை வீழ்த்தினர்.

மகளிர் 20 பந்து பரிமாற்ற உலககோப்பை துடுப்பாட்ட போட்டியில் 5 வது முறையாக வெற்றியாளர் பட்டத்தை ஆஸ்திரேலிய மகளிர் அணி வென்றது.

பகிர்ந்துகொள்ள