தசாப்தகால மோதல்களிற்கு தீர்வை காண்பதன் மூலம் மாத்திரமே நீண்டகால பொருளாதார அபிவிருத்தியை உறுதி செய்யமுடியும்- ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் கருத்து

You are currently viewing தசாப்தகால மோதல்களிற்கு தீர்வை காண்பதன் மூலம் மாத்திரமே நீண்டகால பொருளாதார அபிவிருத்தியை உறுதி செய்யமுடியும்- ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் கருத்து

இந்த வருடம் கொவிட் 19 நெருக்கடியால் இலங்கைக்கு கடுமையான பொருளாதார பின்னடைவு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டெனிஸ் சைபி தெரிவித்துள்ளார்.

ஏனைய உலக நாடுகளும் இதே ஆபத்தை எதிர்கொள்கின்றன என தெரிவித்துள்ள தூதுவர் இதற்கு சர்வதேச ரீதியிலான பதில் நடவடிக்கையே அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

தசாப்த கால மோதல்களிற்கு தீர்வை காண்பதன் மூலம் மாத்திரமே இலங்கையால் நீண்டகால செல்வச்செழிப்பை உறுதி செய்யமுடியும் எனவும் தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் இது மிகவும் சிக்கலான பணி எனவும் தெரிவித்துள்ளார்.
பன்முகத்தன்மையே இலங்கையின் முக்கியமான பலம் என தெரிவித்துள்ள தூதுவர் ஐரோப்பிய ஒன்றிய மக்களும் பன்முகத்தன்மையை மிகவும் முக்கியமானதாக கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவராக நான் நவம்பரில் பொறுப்பேற்ற பின்னர் இலங்கையின் நான் கண்டுள்ள முன்னேற்றங்களை மதிப்பிடுவது கொவிட் 19 காரணமாக கடினமானதாக மாறியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மிகவும் சவாலான கடினமான வருடத்தை சந்தித்துள்ளது என்பது தெளிவான விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் ஏற்பட்ட மெதுவான வளர்ச்சியை சர்வதேச சுகாதார நெருக்கடி பாதித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக குறைந்த பொருளாதார வளர்ச்சி உட்பட பல நுண்பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது.இந்த பிரச்சினைகள் தற்போது பாரிய நெருக்கடியாக மாறியுள்ளனஎனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 காரணமாக சமூக பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பல நாடுகளை போல பல கடினமான முடிவுகளை எடுக்கவேண்டியுள்ளது என டெனிஸ் சைபி தெரிவித்துள்ளார். ஏற்கனவே அதிகமானதாக காணப்படும் பொது கடன் மற்றும் வெளிநாட்டு கடன்களை மீளசெலுத்தவேண்டிய நிலை காரணமாக அரச நிதி என்பது உடனடி சவாலாக காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள