தடுப்பூசி போடாத நியூயோர்க் மாநகர பணியாளர்கள் 9,000 பேருக்கு சம்பளமற்ற விடுமுறை!

You are currently viewing தடுப்பூசி போடாத நியூயோர்க் மாநகர பணியாளர்கள் 9,000 பேருக்கு சம்பளமற்ற விடுமுறை!

நியூயோர்க் மாநகராட்சியில் பணியாற்றும் 378,000 ஊழியர்களில் தடுப்பூசி போடாத சுமார் 9,000 பேர் சம்பளமற்ற கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர்.

நியூயோர்க் நகரில் கட்டாய தடுப்பூசி நடைமுறை அமுல் செய்யப்பட்டுள்ள நிலையில் இதனைக் கடைப்பிடிக்காததன் காரணமாகவே 9,000 பணியாளார்கள் சம்பளமற்ற விடுப்பில் அனுப்பப்பட்டதாக நியூயோர்க் மாநகர மேயர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கான இறுதிக்கட்ட எச்சரிக்கையை அடுத்து கடந்த வார இறுதியில் சுமார் 3,000 ஊழியர்கள் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டனர்.

நியூயோர்க் மாநாகர சபை ஊழியர்களில் பத்தில் ஒன்பது பேர் இப்போது குறைந்தது ஒரு தடுப்பூசியைப் போட்டுள்ளனர்.

எனினும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் கட்டாய தடுப்பூசி திட்டத்துக்கு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். பொலிஸ் மற்றும் தீயணைப்புத் துறையினரும் எதிர்ப்பாளர்களில் அடங்குகின்றனர்.

கட்டாய தடுப்பூசி திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தீயணைப்புத் துறையில் பணியாற்றும் சுமார் 2,300 ஊழியர்கள் ஒரே நேரத்தில் மருத்துவ விடுப்பில் சென்றனர்.

இந்நிலையில் ஊழியர்கள் வேண்டுமென்றே மருத்துவ விடுப்பில் சென்றிருந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கத் தயங்கப் போவதில்லை என்று நகர மேயர் தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments