தண்ணீர் தாங்கியை இடித்து நொருக்கிய கரைச்சி பிரதேச சபை!

You are currently viewing தண்ணீர் தாங்கியை இடித்து நொருக்கிய கரைச்சி பிரதேச சபை!

ஆக்குவதில் காட்டுவதில் அக்கறையை விட அழிப்பதில் தீவிரம் காட்டுகின்றனர்.

கிளிநொச்சியில் செருக்கன் எனும் உவர் பிரதேச கிராமத்தின் அமைக்கப்பட்டு வருகின்ற உப்பளம் ஒன்றில் அங்கு பணியாற்றுகின்ற மக்களின் தேவை கருதி தனியாரால் 15 இலட்சம் செலவில் நீர்த்தாங்கி மற்றும் மலசல கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இது அனுமதி பெறப்படாது அமைக்கப்பட்டது எனத் தெரிவித்து கரைச்சி பிரதேச சபையால் இன்று இடித்து வீழ்த்தப்பட்டுள்ளது. பொது மக்கள் கும்பிட்டு மன்றாடி ஒரு மாத கால அவகாசம் கேட்டும் எதற்கும் செவிக்காது அழித்துவிட்டு சென்றுவிட்டார்கள் என கவலையோடு மக்கள் தெரித்தனர். குறித்த பிரதேசம் 365 நாட்களுக்கும் குடிநீர் வழங்கவேண்டிய பிரதேசமாகும்.

நகரத்தில் ஏராளமான சட்டவிரோத கட்டுமானங்கள் உண்டு ஏன் கரைச்சி பிரதேச சபைக்கு முன்பாகவும் உண்டு இவற்றையெல்லாம் விட்டுவிட்டு காட்டுக்குள் இருக்கும் கிராமத்திற்குள் சென்று சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றனராம்?

பகிர்ந்துகொள்ள