தந்தையை காப்பாற்ற 17 வயது மகள் செய்த காரியம் – குவியும் வாழ்த்துகள்..!

You are currently viewing தந்தையை காப்பாற்ற 17 வயது மகள் செய்த காரியம் – குவியும் வாழ்த்துகள்..!

இந்தியாவில் 17 வயது சிறுமி ஒருவர் தனது கல்லீரலின் ஒரு பகுதியை தந்தைக்கு தானம் செய்து, மிக இளம் வயதில் உடல் உறுப்பு தானம் செய்தவர் என்ற பெருமையை பெற்றுள்ள்ள நிலையில் குறித்த சிறுமிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

இந்தியாவின், கேரள மாநிலம் திருச்சூரில் ஹோட்டல் நடத்தி வருபவர் பிரதீஷ்(48). இவர் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.

இதனையடுத்து அவருக்கு உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வைத்தியர்கள் அறிவுறுத்தினர்.

தந்தைக்கு கல்லீரல் வழங்க தகுந்த நன்கொடையாளர் கிடைக்காததால், தந்தையின் உடல்நிலை, குடும்பத்தின் வறுமை, மருத்துவச் செலவு போன்றவற்றால் பரிதவித்த மகள் தேவானந்தா(17), தனது கல்லீரலின் ஒரு பகுதியை தானம் செய்ய முடிவு செய்தார்.

எனினும் இந்திய உடல் உறுப்பு தான சட்டத்தின்படி, 18 வயது நிரம்பியவர்கள் மட்டுமே உடல் உறுப்பு தானம் செய்ய முடியும் என்பதால், அறுவை சிகிச்சை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து, தந்தையை காப்பாற்ற எண்னிய சிறுமி, தனது தந்தைக்கு உறுப்பு தானம் செய்ய விதி விலக்கு கோரி, கேரள உயர்நீதிமன்றத்தில் தேவானந்தா மனு தாக்கல் செய்தார்.

அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம், பிரதீஷ் உடல்நிலையைக் கவனத்தில் கொண்டு, உடல் உறுப்பு தானம் செய்ய தேவானந்தாவுக்கு அனுமதி அளித்தது.

இதைத் தொடர்ந்து பிப். 9ஆம் திகதி பிரதீஷ்-க்கு கல்லீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

மகள் தேவானந்தாவின் கல்லீரலில் ஒரு பகுதியை எடுத்து அவரது தந்தைக்கு வைத்தியர்கள் பொருத்திய நிலையில் தந்தையும் மகளும் தற்போது உடல்நலம் அடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து வைத்தியர்கள் கூறுகையில்,

‘தேவானந்தா கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக வழங்கியதால் பாதிப்பு ஏற்படாது. அவருக்கு தானமாக வழங்கிய கல்லீரல் அவரது தந்தைக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது. அடுத்த 6 முதல் 8 வாரங்களில் அவரது உடலில் கல்லீரல் வளர்ந்துவிடும் என கூறியுள்ளனர்.

அதோடு தேவானந்தாவின் செயலைப் பாராட்டி அறுவை சிகிச்சை செலவுக்கான கட்டணத்தை மருத்துவமனை தள்ளுபடி செய்துள்ளது.

மேலும் 17 வயது சிறுமி தேவானந்தா தனது கல்லீரலின் ஒரு பகுதியை தந்தைக்கு தானம் செய்து, நாட்டிலேயே மிக இளம் வயதில் உடல் உறுப்பு தானம் செய்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments