தமிழகத்தின் காலநிலை : அடுத்த 48 மணிநேரத்தில், 40 °C வரை வெப்பநிலை பதிவாகும்!

  • Post author:
You are currently viewing தமிழகத்தின் காலநிலை : அடுத்த 48 மணிநேரத்தில், 40 °C வரை வெப்பநிலை பதிவாகும்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில். அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் வெப்பநிலை 39-40 °C வரை பதிவாகும் என்று கூறப்பட்டுள்ளது.

”வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அத்தியாவசிய தேவைக்கு வெளியே செல்பவர்கள் கவனமாக இருக்கவும்”

கடந்த 24 மணி நேரத்தில் மதுரையில் 40 °C, சேலத்தில் 39 °C பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் 2 c.m மழையும், தூத்துக்குடி மாவட்டத்தில் 1 c.m மழையும் பதிவாகியுள்ளது.

தமிழகத்தின் காலநிலை : அடுத்த 48 மணிநேரத்தில், 40 °C வரை வெப்பநிலை பதிவாகும்! 1

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். மேலும் நெல்லை தூத்துக்குடி கன்னியாகுமரி கோயம்புத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை காலை நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பிற்பகலில் வறண்ட வானிலையே நிலவும். அதிகபட்ச வெப்பநிலை 35 °C ஆகவும், குறைந்த பட்ச வெப்ப நிலையாக 26 °C ஆகவும் பதிவாகக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள