தமிழக ஆதரவை ஆட்டம் காண வைக்க முயற்சி!

You are currently viewing தமிழக ஆதரவை ஆட்டம் காண வைக்க முயற்சி!

இலங்கை தமிழர்களுக்கு தமிழகத்தில் உள்ள ஆதரவை ஆட்டம் காண வைப்பதற்காகவே, இருநாட்டு மீனவர்களுக்கிடையில் மோதலை ஏற்படுத்த பேரினவாத சமூகம் முயற்சிப்பதாக தமிழ்த் தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

பேரினவாத சக்திகளின் இந்த சதித் திட்டத்திற்கு சில தமிழ் அரசியல் தலைவர்களும் துணை போகின்றார்களா என கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் இந்திய மீனவர்கள் 23 பேர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். போரின் போது சிறிலங்கா கடற்படையின் வேட்டுக்களுக்கு நூற்றுக்கணக்கில் தமிழ்நாட்டு மீனவர்கள் பலியாகியிருந்தனர் என தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த அச்சுறுத்தல்களுக்கும் மத்தியிலும் தமிழ் நாட்டு மீனவர்களின் படகுகள் இலங்கை கடற்பரப்பிற்குள் மீண்டும் மீண்டும் நுழைந்ததன் காரணம், எமது தமிழ்ப் பிரதேசத்தின் கரைகளை அண்டியுள்ள கடற்பரப்பின் அளப்பரிய மீன் வளமே என்பது நன்கறியப்பட்ட விடயமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

போருக்குப் பின்னரும் தொடர்ந்து கொண்டிருக்கும் தமிழக மீனவர்களின் எல்லை தாண்டிய அத்துமீறல்களால் இலங்கை மீனவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் அதை தடுக்க சிறிலங்கா அரசாங்கம் போதுமான நடவடிக்கைகளை எடுக்க தவறியுள்ளது எனவும் தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments