தமிழர் காணிகளை அபகரிக்க தொடங்கிய கோத்தா.?

  • Post author:
You are currently viewing தமிழர் காணிகளை அபகரிக்க தொடங்கிய கோத்தா.?

வட தமிழீழம் ,  யாழ்ப்பாணம் புங்குடுதீவில் சிறீலங்கா கடற்படையினர் முகாம் அமைப்பதற்கு சுமார் பதின்நான்கு ஏக்கர் காணியை சுவிகரிக்கவுள்ளனர். புங்குடுதீவு கிழக்கு ஒன்பதாம் வட்டாரம் வல்லன் மலையடி நாச்சியார் கோவிலுக்கு அருகில் உள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளே சுவிகரிக்கப்படவுள்ளன. இலங்கைக் கடற்படையின் உத்தரவுடன் வேலணைப் பிரதேச செயலாளர் ஏ.சோதிநாதன் காணி உரிமையாளர்கள் அனைவருக்கும் அறிவுறுத்தல் கடிதம் அனுப்பியுள்ளார். பதின்நான்கு நாள்களுக்குள் ஆட்சேபனைகளை அறியத்தருமாறு பிரதேசச் செயலாளர் அந்தக் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்கள் தாம் விரும்பி நேரத்தில் விரும்பிய இடத்தில் தமிழர்களின் காணிகளை அபகரிக்க வேண்டும் என்பதற்காகவே இலங்கை இந்திய ஒப்பந்ததின் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள காணி அதிகாரத்தை இன்னமும் அமுல்படுத்தாது வைத்துள்ளனர்.

2016 ஆம் ஆண்டில் இருந்து மண்கும்பான் பிரதேசத்தில் உள்ள தீவகத்தின் பிரதான கடற்படை முகாம் தளபதியும் சிறீலங்கா கடற்படையின் உயர் அதிகாரிகள் சிலரும் இந்தக் காணிகளை அபகரிப்பதற்கு கடும் முயற்சி எடுத்திருந்தனர்.

தாயகப்பகுதியில் தமிழர்களின் காணிகளை அபகரிப்பதில் அரச இயந்திரத்தின் ஒரு பிரிவு சிறீலங்கா படையினர் உள்ளனர். தற்போது ஆயிரக்கணக்கான ஏக்கர் காணி அபகரித்து வைத்துள்ளனர். புங்குடுதீவில் அபகரிக்கப்படும் 14 ஏக்கர் காணியில் கடற்படை முகாம் அமைப்பது மாத்திரமல்லாது தென்பகுதி சிங்களவர்களையும் குடியேற்றத்தையும் பாரிய பௌத்த விகாரை அமைப்பதற்காகன முயற்சியாகவே காணி அபகரிப்பு இடம்பெறவுள்ளது.

புங்குடுதீவு வல்லன் கடற்படை முகாமுக்குப் பொறுப்பாக இருந்த கடற்படை உயர் அதிகாரிகளும் அந்தக் காணிக்குரிய பொதுமக்களை அச்சுறுத்தியும் வந்தனர். இந்தக் காணிகள் மற்றும் அருகிலுள்ள மலையடி நாச்சிமார் கோயில் பிரதேசத்தையும் உள்ளடக்கி ஆக்கிரமிப்பதற்கான கடும் முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர்.
பௌத்தம் முன்னுரிமை ஏனைய மதங்களை சமமாக மதிக்கப்படும் என தேர்தல் காலங்களில் சிங்களப் பேரினவாதம் கொக்கரித்த போதும், சிங்களம் பேரினவாதம் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கையைக் கைவிடவில்லை என்பது புங்குடுதீவு காணி அபகரிப்பில் தெட்டத்தெளிவாகிறது. அத்துடன், தமிழர்களின் வழிபாட்டு இடத்திற்கு அருகில் எவ்வாறு கடற்படை முகாம் அமைக்க முடியும்.

எனினும், பிரதேச மக்களின் கடும் எதிர்ப்புகளினால் அந்த முயற்சி கைகூடவில்லை. இந்த நிலையில், கொழும்பு நிர்வாகத்தின் அனுமதியோடு சிறீலங்கா கடற்படையின் கொழும்புத் தலைமைப் பீடம் யாழ் மாவட்டச் செயலகத்திற்கு கடும் அழுத்தங்களை வழங்கியிருந்தது.

சிறீலங்கா கடற்படையின் கோட்டயம்பர படைப்பிரிவுக்கே பாரிய முகாம் அமைக்கப்படவுள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள