தமிழர் தாயகத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க பெருந்தொகை சிங்கள படையினர் சேவையில்..!

You are currently viewing தமிழர் தாயகத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க பெருந்தொகை சிங்கள படையினர் சேவையில்..!

வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே சிங்கள பேரினவாத படையினர் தொடர்ந்தும் சேவையில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையில் 3 லட்சத்து 33 ஆயிரம் படையினர் சேவையில் உள்ளனர் என்றும் அதில் வடக்கு கிழக்கை கட்டுப்படுத்தவே பெருந்தொகையில் படையினர் பயன்படுத்தப்படுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் முன் முன்மொழியப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டத்தில் மக்கள் நிவாரணங்களை காட்டிலும் பாதுகாப்புக்கு அதிக நிதி ஒதுக்கப்படும் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இலங்கையில் பெருமளவு படையினர் தொடர்ந்தும் சேவையில் இருப்பது இந்தியாவுக்கு, சீனாவுக்கு அல்லதுஅமெரிக்காவுக்கு எதிராகப் போர் செய்வதற்காக அல்ல என்றும் வடக்கு கிழக்கில் தமிழ் பிரதேசங்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே எனவும் தெரிவித்தார்.

போருக்குப்பின் ஒரு நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய பொறிமுறைகளை இலங்கை இன்னும் முன்னெடுக்கவில்லை அதாவது, நிராயுதபாணியாக்கல், படைகளில் இருந்து விடுவித்தல், மறு ஒருங்கிணைப்பு என்ற 3 விடயங்களும் இன்னமும் முன்னெடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், பயங்கரவாத சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களை விடுவிக்கப்படவில்லை இவ்வாறான நிலையில் தமிழ் கட்சிகள் சர்வ கட்சி அரசாங்கத்தில் இணைவதில் பயனில்லை என்றும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments