தமிழீழத் தேசிய மாவீரர் நாளுக்கு தயார் நிலையில் மட்டக்களப்பு மாவட்ட மாவீர் துயிலுமில்லங்கள்!

You are currently viewing தமிழீழத் தேசிய மாவீரர் நாளுக்கு தயார் நிலையில் மட்டக்களப்பு மாவட்ட மாவீர் துயிலுமில்லங்கள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவீரர் வாரத்தை முன்னிட்டு வாகரை, மாவடிமுன்மாரி, தரவை, தாண்டியடி ஆகிய 4 துயிலும் இலங்களில் எதிர்வரும் 27ம் திகதி சென்று விளக்கு ஏற்றுவதற்காக போக்குவரத்து உட்பட அனைத்து நடவடிக்கையும் செய்யப்பட்டுள்ளது. எனவே துயிலும் இல்லங்களுக்குச் சென்று விளக்கேற்ற முடியாதவர்கள் தங்களது இல்லங்களில் குறித்த நேரத்திற்கு விளக்கேற்றுமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்வதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம்  சுரேஷ்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மாவடிமுன்மாரி துயிலுமில்ல இரண்டாம் கட்ட துப்பரவுப்பணிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) தமிழ் தேசிய மக்கள் முன்னணி யின் செயற்பாட்டளர்களால் முன்னெடுக்கப்பட்டது இதன்போது அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ  ஊடகங்களக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தரவை, வாகரை (கண்டலடி), மாவடிமுன்மாரி மற்றும் தாண்டியடி துயிலும் இல்லங்களில் ஆரம்பக்கட்ட துப்பரவுப்பணிகள் முன்னணியின் செயற்பாட்டாளர்களின் முன்னெடுக்பட்டுவந்த நிலையில் இரண்டாம் கட்ட துப்பரவு பணி மக்களின் பங்களிப்புடனும் நடைபெற்று வருகின்றது.

இதனடிப்படையில் நேற்று மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்தின் நிலப்பகுதி எமது இளைஞர்களின் பங்களிப்புடன் உழுவு இயந்திரம் மூலம் உழுது சுத்தம் செய்யப்பட்டதுடன் மாவட்டத்திலுள்ள 4 மாவீர் துயிலும் இல்லங்களில் 27 ம் திகதி மாலை 6.05 விளக்கு ஏற்றி நினைவு கூருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதுடன்  துயிலும் இல்லங்களுக்கு செல்வதற்காக போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது

எனவே 27ம் திகதி துயிலும் இல்லங்களுக்கும் செல்லமுடியாதவர்கள் அவர்களது வீட்டில் குறித்த நேரத்தில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments