தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் நசுக்கபட வேண்டுமென்பதே சம்மந்தன் விருப்பம்!

You are currently viewing தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் நசுக்கபட வேண்டுமென்பதே சம்மந்தன் விருப்பம்!

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் நசுக்கபட வேண்டும் என்பதனை சம்பந்தன் முழு மனதாக விரும்பினார் என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். சாவச்சேரியில் இடம் பெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முன்னதாக சம்பந்தனுக்கு பதிலாக 22 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட குழுவிலே, சுயமரியாதையும், துடிப்புமுடைய தமிழன் போர்க்களத்தில் குழந்தைகள், பெண்கள் தொடக்கம் முதியவர்கள் வரை விமான குண்டு வீச்சிற்கும் , ஷெல் அடிகளிற்கும் பலியாகி கொண்டிருந்த பொழுது தலைவராக இருந்திருந்தார்.

நான் திட்டவட்டமாக கூறுகின்றேன் யுத்தம் கட்டாயம் நிறுத்தபட்டிருக்கும்.எமது 22 எம்பிக்களும் அப்போது பல்வேறு நாடுகளில் செயலாற்றி வரும் நிலையில் ராமதாஸ் எங்களை டெல்லிக்கு அழைத்து இந்திய பாராளுமன்றில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்க வைத்தார்.

இந்திய நாடாளுமன்றிலுள்ள கட்சித் தலைவர்களிடம் இலங்கையில் இடம்பெற்று வரும் யுத்தத்தினை நிறுத்த வேண்டும் தமிழ் மக்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய பாராளுமன்றிலுள்ள அத்தனை கட்சி தலைவர்களுக்கும் பகிரங்க வேண்டுகோளாக தனித்தனியாக சந்திக்கும் ஆவலோடு ஒரு கடிதத்தை பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் இராமதாஸ் எமக்கு அனுப்பி அந்த கடிதத்தை கையொப்பமிட்டு அதனை மீண்டும் தனக்கு அனுப்புமாறும் கோரிக்கை விடுத்தார்.

அதனை கையொப்பமிட்டு மீண்டும் அனுப்புமாறும் அதனை தான் ஆவணப்படுத்துமாறும் கூறிய போதும் குறித்த கடிதம் கிடைத்தது என்றுகூட பாட்டாளி மக்கள் தலைவருக்கு சம்பந்தன் அறிவிக்கவில்லை.

ஏனெனில் தமிழீழ விடுதலைபுலிகள் இயக்கம் முற்றாக நசுக்கப்பட்ட வேண்டும் என்பதனை சம்பந்தன் உள்ளூர விரும்பினார். அவரது இறுதி நாட்களில் இதனை கூற வேண்டியது எமது கடமை .

சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழரசு கட்சியிலுள்ள தலைவர்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரை உச்சரிப்பதற்கு எந்த தகுதியும் இல்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிவதற்காக மக்களை ஏமாற்றுகின்ற மற்றும் நம்பமுடியாத கதைகளை தமிழரசு கட்சியில் உள்ளவர்கள் கூறி வருவதாக ஸ்ரீகாந்தா குற்றம் சுமத்தியுள்ளார். எனவே இந்த தேர்தல் மூலம் தமிழரசு கட்சி மக்களிடமிருந்து முறையான பாடம் ஒன்றை கற்றுக்கொள்ளும் என்றும் அவர் சூளுரைத்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments