தமிழ் தேசிய மக்கள் முன்னணி புதிதாக உருவாகும் தமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையாது!!

You are currently viewing தமிழ் தேசிய மக்கள் முன்னணி புதிதாக உருவாகும் தமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையாது!!

தமிழ் தேசிய மக்கள் முன்னணி புதிதாக உருவாகும் தமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார் அந்தக் கட்சியின் செ. கஜேந்திரன்.

தமிழ்த் தேசியக் கட்சிகள் நேற்று யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி பேசின. ஆரம்பத்தில் நடைபெற்ற கூட்டங்களில் பங்கேற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்தக் கூட்டத்திலும் பங்கேற்கவில்லை.

இந்நிலையில், இந்தப் பேரவையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இணைந்து பயணிக்குமா?

என்று அந்தக் கட்சியின் செயலாளர் செ. கஜேந்திரனிடம் தொடர்பு கொண்டு கேட்டது.

இதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-“பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி போராட்டம் வெற்றிகரமாக மக்கள் எழுச்சி போராட்டமாக இடம் பெற்றது.

இதற்கு தமிழ் அரசுக் கட்சியும் ஆதரவளித்தது.

ஆனால், இந்தப் போராட்டத்தைக் காட்டிக் கொடுக்கும் விதமாக பச்சைத் துரோகத்தனமாக அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.

இன்று தமிழ் மக்களுக்கு பலவீனமான ஐ. நா. வின் அறிக்கை ஒன்று வந்துள்ளது என்றால் அதை முழுமையாக தமிழ் அரசுக் கட்சிதான் ஏற்க வேண்டும்.

‘சுமந்திரனின் இந்தத் துரோகத்தனத்தை நியாயப்படுத்தும் விதமாகவே எம்.கே.சிவாஜிலிங்கமும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இந்தத் தரப்புக்கள் கூடித்தான் இந்தப் பேரவையை அமைக்கின்றன.

இது முழுக்க முழுக்க கண்துடைப்பு நாடகம். மக்களை ஏமாற்றி தாங்கள் செய்யும் துரோகத்தை மறைக்கும் விதமாகவே நாங்கள் இதனைப் பார்க்கிறோம்.

தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளரான சுமந்திரன் அந்தக் கூட்டில் இருந்து கொண்டு கோட்டாபயவை பாதுகாப்பதற்காக நாடகமாடுகிறார் என்பதே எமது கருத்து” என்றார்.

பகிர்ந்துகொள்ள