தமிழ் மக்களுக்கு எதிரான கட்டமைப்பு சார் இனவழிப்பை தொடர்வதற்கான துணிச்சiலையே வழங்கியுள்ளது!

You are currently viewing தமிழ் மக்களுக்கு எதிரான கட்டமைப்பு சார் இனவழிப்பை தொடர்வதற்கான துணிச்சiலையே வழங்கியுள்ளது!

ஐ.நா பொதுச் சபை தொடர்ந்தும் தமிழர்ளுக்கு துரோகம் இழைக்கின்றது. ஐநா பொதுச் சபைக் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டாபயராஜபக்ச அவர்கள் ஐநா தலைமையகத்தில் அதன் பொதுச் செயலாளரை நேற்று முன்தினம் (2021 செப்டம்பர் 19) சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.இந்த சந்திப்பின் போது சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் வகையில் சில உறுதிமொழிகளை வழங்கியுள்ளார்.

அதாவது ‘பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் தொடர்பிலான சட்ட செயற்பாடுகள் முடிவடைந்ததன் பின்னர் அவர்களை ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்க தாம் தயங்கப் போவதில்லை’என்றும் ‘காணாமல் போனவர்களுக்க மரணச் சான்றிதழ் விரைவாக வழங்கப்படும்’ என்ற உறுதிமொழிகளை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

இவற்றுக்கு ஐநா பொதுச் சபை செயலாளர் உரிய பதில்கள் வழங்கத் தவறியிருப்பதானது தமிழர்கள் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை 2009 ஆம் ஆண்டு இழைத்த தவறையே தொடர்ந்தும் செய்துள்ளது என்பதனையே காட்டுகின்றது. ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு 2015 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் இலங்கை அரசு வழங்கிய உறுதிமொழிகளின் பிரகாரம் கொடிய பயங்கரவாதத் தடைச்சட்டத்தினை இலங்கை இன்னமும் நீக்கவில்லை என்பதனையும் அச்சட்டத்தின் கீழ் தொடர்ந்தும் தமிழர்களை தடுத்து வைத்திருப்பது சர்வதேச கடப்பாடுகளை மீறும் செயற்பாடு என்தனையும் அச் சட்டம் உடனடியாக நீக்கப்பட்டு அதன் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்படல் வேண்டும் என்பதனையும் ஐநா பொதுச் சபையின் செயலாளர் சுட்டிக்காட்டத் தவறியுள்ளார். அப்பாவி இளைஞர்களை கொடிய பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து சித்திவைதைகள் மூலம் அவர்கள் செய்யாத குற்றங்களையும் செய்ததாக ஒப்புக்கொள்ள வைத்துள்ளது மட்டுமன்றி சட்டமா அதிபர் திணைக்களம் வழக்குகளுக்கு ஆஜராகாமல் தவணைகளை எடுப்பதன் மூலம் நீதிமன்ற வழக்குகளை ஒழங்காக நடாத்தாத காரணத்தால் 20 வருடங்கள வரை பலர் சிறைகளில் வாடுகின்றனர். இந்நிலையில் ‘ பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் தொடர்பிலான சட்ட செயற்பாடுகளை முன்னெடுக்கின்றோம்’ என்ற போர்வையில் மேலும் பல வருடங்கள் தமிழ் கைதிகளை சிறைகளுக்குள் அடைத்து வைத்திருப்பதற்கான வாய்ப்பினை அரசு பெற்றுக் கொண்டுள்ளது. மேலும் செய்யதா குற்றத்தையும் செய்ததாக ஒப்புக்கொண்டால் பொது மன்னிப்பில் விடுவிக்கப்படுவோம் என்ற தவறான நம்பிக்கையினால் கைதிகள் ஏமாற்றப்படும் நிலைக்கு வித்திட்டுள்ளது. அது மட்டுமன்றி அரசு தவறான கொடிய சட்டத்தின் கீழ் இத்தனை ஆண்டுகள் செய்யாத குற்றத்திற்காக அடைக்கப்பட்டிருந்தமைக்கு பாதிக்கப்பட்ட தமிழ் இளைஞர்களுக்கு எந்த நீதியும் கிடைக்காமல் போகும் நிலைக்கும் வழிவகுக்கப்பட்டுள்ளதுடன் அரசின் தவறான நடவடிக்கைகளை மூடி மறைக்கப்படவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2009 மே மாதம் கோட்டாபய ராஜபக்சவின் நேரடி வழிகாட்டலின் கீழ் இயங்கிய ஆயுதப் படைகளிடம் சரணடைந்த மற்றும் உறவினர்களால் கையளிக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகள் மற்றும் அவர்களது மனைவி பிள்ளைகளுக்கும் என்ன நடந்தது என்பது பற்றி பொறுப்புக் கூற வேண்டியவராக கோட்டாபயராஜபக்ச உள்ளார்.

அவ்வாறான ஒருவரை பொறுப்புக் கூற நிர்ப்பந்திக்க வேண்டிய ஐ.நா சபையின் பொதுச் செயலாளர் முன்னிலையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்க மரணச் சான்றிதழ் வழங்குவதனை விரைவு படுத்துவேன் என்று கோட்டாபய கூடியயுள்ள நிலையில் இலங்கையுடன் ஐநா ஒத்துழைத்துச் செயற்படத் தயார் என்று பொதுச் செயலாளர் கூறியுள்ளமையானது பொறுப்புக் கூறுவதிலிருந்து இலங்கை விலகிச் செல்ல ஐநா துணை நிற்பதனையே வெளிப்படுதுகின்றது. ஐநா சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் இலங்கையில் இடம்பெற்ற குற்றங்களை ஆராய ஒரு நிபுணர் குழுவை நியமித்தார். அந்த அந்த நிபுணர் குழு 2011 மார்ச் 31 ஆம் திகதி ஓர் அறிக்கையினை ஐநா செயலாளர் நாயகத்திடம் சமர்ப்பித்திருந்து. அந்த அறிக்கையில் சிறீலங்கா அரசு தமிழர்களை குறிவைத்து பாரிய குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அந்த அறிக்கையை அப்போதய ஐ.நா பொதுச் செயலாளர் நாயகம் அவர்களால் ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு பாரப்படுத்தப்பட்டு, அது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டது. அதன் பிரகாரம் 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ‘இலங்கையில் பொறுப்புக் கூறலுக்கும் நல்லிணக்கத்திற்குமான தீர்மானம்’ என்னும் பெயரில் ஓர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத் தினத்திலிருந்து கடந்த 9 வருடங்களாக பொறுப்புக் கூறல் பற்றியும் நல்லிணக்கம் பற்றியும் ஐநா மனித உரிமைகள் பேரவையில் பேசப்பட்டு வருகின்றபோதிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஐ.நா செயலாளர் நாயக்த்தின் பணிப்பின் கீழ் ஐ.நா மனித உரிமைகள் பேரவை இயற்றிய தீர்மானத்தில் பொறுப்புக் கூறல் தொடர்பில் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டிராத நிலையில், குறித்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தை நோக்கி கொண்டு செல்வது பற்றி எந்தக் கருத்தையும் ஐநா செயலாளர் நாயகம் வலியுத்தத் தவறியுள்ளமையானது சிறீலங்கா அரசு தமிழ் மக்களுக்கு எதிரான கட்டமைப்பு சார் இனவழிப்பை தொடர்வதற்கான துணிச்சiலையே வழங்கியுள்ளது.என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments