தலிபான் விசேட அதிரடிப் படையினரின் கட்டுப்பாட்டில் காபூல் விமான நிலையம்!

You are currently viewing தலிபான் விசேட அதிரடிப் படையினரின் கட்டுப்பாட்டில் காபூல் விமான நிலையம்!

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் நேற்று முழுமையாக வெளியேறிய பின்னர் காபூல் விமான நிலையம் முழுமையாக தலிபான் விசேட அதிரடிப் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

காபூல் விமான நிலையத்துக்கு உள்ளேயும் வெளியிலும் பாதுகாப்பு பணிகளில் விசேட அதிரடிப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா முழுமையாக வெளியேறுவதற்கான காலக்கெடு நேற்று ஆகஸ்ட் 31 ஆம் திகதியுன் முடிவடையும் நிலையில் அந்தக் கெடுவுக்கு அமெரிக்கா முழுமையாக வெளியேறியது.

இதன்மூலம் ஆப்கானிஸ்தானில் 20 வருடங்களுக்கு மேலாக நீடித்த அமெரிக்காவின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.

அமெரிக்க இராணுவத்தின் 82 -ஆவது விமானப்படை பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கிறிஸ் டோனாஹூ, ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சி-17விமானத்தில் ஏறினார். இதன் மூலம் மேஜர் ஜெனரல் டோனாஹூவே ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறும் இறுதி அமெரிக்க இராணுவ உறுப்பினராக பதிவு செய்யப்பட்டுள்ளார்.இத்துடன் ஆப்கானில் அமெரிக்காவின் அனைத்துப் பணிகளும் முடிவுக்கு வந்தன.

இதேவேளை, ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முழுமையாகக் கைப்பற்றிய பின்னர் சுமார் 123,000 பொதுமக்களை அங்கிருந்து பாதுகாப்பாக தாங்கள் வெளியேற்றியுள்ளதாக மீட்புப் பணிகளுக்கு தலைமைதாங்கிய அமெரிக்க இராணுவ ஜெனரல் பிராங்க் மெக்கன்சி தெரிவித்துள்ளார்.

பொதுமக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் இந்தப் பணிக்காக அமெரிக்கா அதிக விலை கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். விமான நிலையத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13அமெரிக்க படையினர் உட்பட 170பேர் கொல்லப்பட்டதை அவர் நினைவு கூர்ந்தார்.

இதேவேளை, ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா நேற்று முழுமையாக வெளியேறியதை அடுத்து வானத்தை நோக்கி துப்பாக்கி வேட்டுக்களைத் தீா்த்து தலிபான்கள் கொண்டாடினர்.

20 வருட கால ஆக்கிரமிப்புக்குப் பின்னர் அமெரிக்கா முழுமையாக வெளியேறியதன் மூலம் எங்கள் நாடு முழுமையாக சுதந்திரம் பெற்றுள்ளது என தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்தார்.

இவ்வாறான நிலையிலேயே தற்போது காபூல் விமான நிலையத்தை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள தலிபான்கள், அங்கு தங்கள் விசேட அதிரடிப் படையினரை பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments