தாயகத்தாய்! அன்னைபூபதி

You are currently viewing தாயகத்தாய்! அன்னைபூபதி

பல்லாயிரம் தியாகங்களில்
அன்னை பூபதியம்மாவின் தியாகம்
அணையா விளக்காய் அகிலத்தை
ஆள்கின்றது!

தியாகச் செம்மல்
திலீபனின்
தியாகத்தின் வழி
உலகத்தின் முதல் பெண்மணியாய்
முதிர்ந்த வயதிலும்
பட்டிணிப் போர்தொடுத்து
அறத்தை வென்றாயம்மா!

தமிழின விடுதலையின்
கட்டியம் கூறி நின்ற
புனிதப் போரில்
பெண்ணியத்தின்
பெரும் தியாகத்தில்
வரமாய் வந்துதித்தாயம்மா!

அமைதியென்ற கோரமுகத்தை
கிழித்தெறிந்து
அண்ணன் வழி நின்று
பயங்கரவாதியென
திட்டம் போட்டு பட்டம்
சூட்டியவனின்
பயங்கரவாத முகத்திரையை
கிழித்தெறிந்து
நியாயத்தினை
நிலை நாட்டினாய்
தாயே!

குருந்தைமரத்தில் உருகி நின்ற
பருதியொன்றின் ஒளியிழந்து போனதால்?

போதிமரத்தின் போதையேறி
கூன் வீழ்ந்த
மனங்களாய் போனதம்மா
ஈழத்தமிழன் வாழ்வு!

அறத்தின் ஆழத்தை
அவனியில் நிலைநாட்டி!
காந்திதேசத்தின் கோரமுகத்தினை
உலகிற்கு நீ காட்டி!
பட்டினித்தீயில் உனை மூட்டி!
நெஞ்சை விட்டகலாத விடுதலைத் தேரோட்டியாய்!
நீ இதயத்தை ஆள்கிறாய்
அம்மா!

காலமூச்சில் காயங்கள்
கரைந்துபோகாது
ஞாலமேனியெங்கும்
கொண்ட கொள்கைக்காய்
வீறுகொண்டு விரைவான்
உனை மறவாத் தமிழன்!

✍தூயவன்

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments