தென் கொரியா : வடகொரியா தலைவர் உயிருடன் இருக்கிறார்!

  • Post author:
You are currently viewing தென் கொரியா : வடகொரியா தலைவர் உயிருடன் இருக்கிறார்!

வட கொரிய தலைவர் “Kim Jong-un” உயிருடன் இருக்கிறார் என்று தென் கொரிய அதிபரின் (Moon Jae-in) உயர் பாதுகாப்பு ஆலோசகர் கூறி உள்ளார்.

அமெரிக்க ஆதாரங்களின் படி எந்த உறுதியான தகவலும் இல்லை என்றாலும், Kim இறந்துவிட்டதாக Hong Hong Satellite தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதை தொடர்ந்து வட கொரியாவின் தலைவரான Kim Jong-un னின் உடல்நிலை குறித்து தெரிந்து கொள்ள சீனா மருத்துவர்கள் குழுவை வட கொரியாவுக்கு அனுப்பியது.

இந்த நிலையில் வட கொரிய தலைவர் Kim Jong-un “உயிருடன் இருக்கிறார்” என்று தென் கொரிய அதிபரின் உயர் பாதுகாப்பு ஆலோசகர் கூறி உள்ளார்.

தென் கொரிய அதிபர் Moon Jae-in னின் பாதுகாப்பு சிறப்பு ஆலோசகர் Moon Sung-in, CNN செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

எங்கள் அரசாங்க நிலைப்பாடு உறுதியானது. Kim Jong-un உயிருடன் நலமாக இருக்கிறார். நாட்டின் கிழக்கில் உள்ள ரிசார்ட் நகரமான வொன்சனில் (Wonsan) Kim தங்கி உள்ளார். ஏப்ரல் 13 முதல், இதுவரை சந்தேகத்திற்கிடமான விவகாரங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என கூறினார்.

பகிர்ந்துகொள்ள