நடுவானில் ஏற்பட்ட மாரடைப்பினால் பரிதாபமாக உயிரிழந்த விமானி!

You are currently viewing நடுவானில் ஏற்பட்ட மாரடைப்பினால் பரிதாபமாக உயிரிழந்த விமானி!

நடுவானில் விமானம் பறந்தபோது மாரடைப்பு ஏற்பட்ட வங்கதேச விமானி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனா கட்டுப்பாடு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட விமான சேவையை வங்காளதேச விமான நிறுவனம் சமீபத்தில் தொடங்கியது.

வங்கதேசத்தின் பிமன் பங்களாதேஷ் விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று, 124 பயணிகளுடன் ஓமனின் மஸ்கட்டில் இருந்து கடந்த 27-ஆம் திகதி காலை தலைநகர் டாக்காவுக்கு சென்று கொண்டிருந்தது.

இந்திய மாநிலம் சத்தீஸ்கர், ராய்ப்பூர் அருகே பறந்து கொண்டிருந்தபோது அந்த விமானத்தின் விமானிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதனால் அருகே உள்ள மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதிக்கப்பட்டதை அடுத்து அங்கு விமானத்தை துணை விமானி அவசரமாக தரையிறக்கினார்.

அதன்பின் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட விமானி நவுசாத் அதுல் (Nawshad Ataul Qayum) 49, அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில், அவரது நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வந்ததால், திங்கட்கிழமை காலை 10 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments