நன்றி(merci)தெரிவிக்கும் ஈஃபிள் கோபுரம்!

You are currently viewing நன்றி(merci)தெரிவிக்கும் ஈஃபிள் கோபுரம்!

ஈஃபிள் கோபுரத்தில் இன்றில் இருந்து தினமும் நன்றி (Merci)எனும் வார்த்தைகள் ஒளிரவிடப்பட உள்ளன. கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இரவு பகலாக பணியாற்றிவரும் மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள், தாதியர்கள் ஆகியவர்களுக்கு நன்றி (merci)தெரிவிக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
 
இது தொடர்பாக பரிஸ் நகரசபை அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் இந்த நன்றி வெறுமனே மருத்துவர்களுக்கானது மட்டுமில்லை எனவும்,  மாறாக ஜொந்தாமினர், காவல்துறையினர், தீயணைப்பு படையினர், மருத்துவ உதவியாளர்கள், தூய்மை பணியாளர்கள், தன்னார்வ தொண்டர்கள், நிதி சேகரிப்பாளர்கள், நன்கொடையாளர்கள் என கொரோனா வைரசுக்கு எதிராக பணிபுரியும் அனைவருக்குமான நன்றி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இன்று முதல், இரவு 8 மணிக்கு ஈஃபிள் கோபுரத்தில் இந்த Merci எனும் வார்த்தை ஒளிரவிடப்படும். அத்தோடு, ‘வீட்டில் இருங்கள்’ என்பதை குறிக்கும் விதமாக Restez chez vous என பிரெஞ்சிலும் Stay at Home என ஆங்கிலத்திலும் வார்த்தைகள் ஒளிரவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள