நல்லிணக்கம், நீதியை முன்னெடுக்க ஆழமான கட்டமைப்பு சீர்த்திருத்தங்கள் அவசியம்!

You are currently viewing நல்லிணக்கம், நீதியை முன்னெடுக்க ஆழமான கட்டமைப்பு சீர்த்திருத்தங்கள் அவசியம்!

இலங்கையில் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள பாதிக்கப்படக் கூடிய நிலையில் உள்ள மக்களிற்கான நிவாரணத்தை உறுதி செய்ய வேண்டும். மீள்எழுச்சி திட்டங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது சமூகப்பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செலே பச்செலெட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மனித உரிமை பேரவையின் 50 ஆவது அமர்வில் உரையாற்றும்போது இது குறித்து தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

சில உலக நாடுகளில் பொருளாதார மற்றும் பிற நெருக்கடிகள் காரணமாக மனித உரிமைகள் மீதான கவலைக்குரிய விளைவுகளை நாங்கள் எதிர்கொள்கின்றோம்.

இலங்கையில் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள மக்களிற்கான நிவாரணத்தை வழங்கி உதவி செய்யுமாறும், மீள்எழுச்சி திட்டங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது சமூகப்பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்குமாறும் நான் இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றேன்.

நிர்வாகத்தில் அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கும் ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதற்கும் அனைத்து சமூகங்களிற்கும் நல்லிணக்கம் நீதியை முன்னெடுப்பதற்கும் ஆழமான கட்டமைப்பு சீர்த்திருத்தங்களில் கவனம் செலுத்தவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments