“நான்ஸி போலேசி” மீது தடைகளை விதிக்கும் சீனா!

You are currently viewing “நான்ஸி போலேசி” மீது தடைகளை விதிக்கும் சீனா!

அமெரிக்க காங்கிரஸ் தலைவர் “நான்ஸி போலேசி” அம்மையார், சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி தாய்வானுக்கு வருகை தந்திருந்ததையடுத்து, தாய்வானை சுற்றி மிகப்பெரும் இராணுவ ஒத்திகையை நடத்தியுள்ள சீனா, தனது கோபத்தை வெளிப்படுத்துமுகமாக “நான்ஸி போலேசி” அம்மையார் மீது தடைகளை விதிப்பதாக அறிவித்துள்ளது.

இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள “Reuters” செய்தி நிறுவனம், முதற்கட்டமாக “பேலோசி” அம்மையாரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மீது தடைகளை விதிப்பதாகவும், தொடர்ந்து “பேலோசி” அம்மையார் மீதான தடைகள் பற்றிய அறிவிப்பு வெளிவருமெனவும் சீன அரசு தெரிவித்துள்ளதாகவும், எனினும் எவ்விதமான தடைகள் விதிக்கப்பட இருக்கின்றன தொடர்பிலான தகவல்களை சீனா இன்னமும் வெளியிடவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

தாய்வானுடனான அமெரிக்காவின் நெருங்கிய தொடர்புகள், தாய்வான் மீதான சீன படையெடுப்பொன்றை துரிதப்படுத்துமென எதிர்பார்க்கப்படும் நிலையில், சீனாவின் கடும் எதிர்ப்புக்களையும், எச்சரிக்கையையும் மீறி, சுமார் 20 அமெரிக்க விமானப்படை விமானங்கள், அமெரிக்க கடற்படை கப்பல்கள் பாதுகாப்பளிக்க, பெரும் பொருட்ச்செலவில் தாய்வான் வந்தடைந்த “நான்ஸி பேலோசி” அம்மையாரின் வருகை, அப்பிராந்தியத்தில் ஆபத்தான நிலைமைகளை உண்டாக்கியுள்ளதோடு, சீனா, தாய்வான், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிடையே மேன்மேலும் பதட்டங்களையும் உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீனா, தனக்கு அச்சுறுத்தலாக இருக்கிறதென அமெரிக்கா தெரிவித்துவரும் நிலையில், சீனாவின் முதன்மை பிரச்சனைகளில் முக்கியமான தாய்வான் விடயத்தை கையிலெடுப்பதன் மூலம் சீனாவை வலிந்த போறொன்றுக்கு இழுப்பதன் மூலம் ரஷ்யாவை போலவே சீனாவையும் தனிமைப்படுத்தி, இராணுவபலத்திலும், பொருளாதார பலத்திலும் சீனாவை சிக்கலுக்குள்ளாக்க அமெரிக்கா முனைவதை சீனா மிகக்கவனமாக கையாள்வதாக அவதானிப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

கடும் பாதுகாப்புக்களுக்கு மத்தியில் தாய்வான் வரும் “நான்ஸி பேலோசி” அம்மையார்.
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments