நியூசிலாந்துக்கு எதிரான தொடரை முழுமையாக வென்றது ஆஸ்திரேலியா!

  • Post author:
You are currently viewing நியூசிலாந்துக்கு எதிரான தொடரை முழுமையாக வென்றது ஆஸ்திரேலியா!

நியூசிலாந்து துடுப்பாட்ட அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. பெர்த் மற்றும் மெல்போர்னில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் முறையே 296 ஓட்டங்கள் மற்றும் 247 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை ஆஸ்திரேலியா வென்றது.

தொடரை வென்ற நிலையில், 3-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் கடந்த 3 ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் நாணய சுழட்சியில் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. முதல் சுற்றில் ஆஸ்திரேலிய அணி 454 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதையடுத்து, தனது முதல் சுற்றை துவங்கிய நியூசிலாந்து அணி 256 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது.

இதையடுத்து 2-வது சுற்றை ஆடிய ஆஸ்திரேலிய அணி 2 இலக்குகள் இழப்புக்கு 217 ஓட்டங்கள் சேர்த்து இருந்த நிலையில், 2-வது சுற்றை நிறுத்தியது. இதையடுத்து, 416 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பேட்டிங்கை துவக்கிய நியூசிலாந்து அணி 136 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது. இதன் மூலம் 279 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதோடு தொடரையும் முழுமையாக வென்றது.

பகிர்ந்துகொள்ள