நிவாரணம் வழங்குவதில் இனப்பாகுபாடு காட்டும் சிங்கள அரசு!

You are currently viewing நிவாரணம் வழங்குவதில் இனப்பாகுபாடு காட்டும் சிங்கள அரசு!

உலகளாவிய ரீதியில் கொரொனா தொற்று ஏற்பட்டு பல நாடுகளையும் முடக்கிப் போட்டிருக்கிறது. சிறிலங்கா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கை அமுல்படுத்தியதோடு பல்வேறு நிவாரணங்களை அறிவித்திருந்தாலும் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிற்கு எந்த விதமான நிவாரணங்களும் சிங்கள அரசாங்கத்தால் வழங்கப்படவில்லை என தெரியவருகிறது.

சமுர்த்தி பயணாளிகளிற்கு 10 ஆயிரம் ரூபா இடர்கால நிவாரணமாக வழங்கப்படும் என அறிவிப்புகள் வெளியாகியிருந்தாலும் அவை பெரும்பாலும் சிங்கள மக்கள் வாழும் பகுதிகளிற்கு வழங்கப்படுவதுடன் தமிழ்ப் பிரதேசங்களில் சில இடங்களில் 5000 ரூபாவும் மிகுதி 5000 ஆயிரம் ரூபாவிற்கு நிவாரணப் பொருட்களும் கடன் அடிப்படையில் வழங்கப்படுவதாகவும் தெரியவருகிறது.

நேற்றைய தினம் வடமராட்சி பொலிகண்டிப்பகுதியில் சமுர்த்தி பயணாளிகளிடம் பணம் வழங்குவதற்கான கையொப்பம் பெற்று பணம் வழங்காது சென்ற சம்பமும் நடைபெற்றிருக்கிறது.

சிங்கள அரசின் எமாற்று திட்ட அறிவிப்புகள் ஒருபுறமிருக்க மறுபுறம் பொது அமைப்புகளாலும், கொடை வழங்குனர்களாலும் அரசில்கட்சிகளாலும் தமிழ் பிரதேசங்களில் வழங்கப்படும் உதவித் திட்டங்களை தாங்கள் வழங்குவது போன்றான படப்பிடிப்பு வேலைகளையும் அரச அதிகாரிகள் செய்து வருவதாகவும் தெரியவருகிறது.

சில இடங்களில் பொது அமைப்புகளிடம் தங்கள் பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள மக்களிற்கு நிவாரங்களை வழங்குமாறு அரச உயரதிகாரிகள் கடிதம் மூலம் கோருவதாகவும் தெரிய வருகிறது.

தமிழ் மக்களிடத்தில் இருக்கும் பொது அமைப்புகளிடமோ அரசியல் கட்சிகளிடமோ பொருத்தமான தலைமை இல்லாமல் இருப்பதால் அவர்களால் வழங்கப்படும் உதவிகள் தேவைப்படுவோருக்கு சரியான முறையில் பகிர்ந்தளிக்கப்படவில்லை எண்பதே உண்மை.

பகிர்ந்துகொள்ள