நீதி கோரிய பயணம் நாளையதினம் மாலை ஜெனிவா நகரில் உள்ள ஐ.நா முன்றலை சென்றடைய உள்ளது!

You are currently viewing நீதி கோரிய பயணம் நாளையதினம் மாலை ஜெனிவா நகரில் உள்ள ஐ.நா முன்றலை சென்றடைய உள்ளது!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் 52 வது கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் சூழலில் சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட்டுவருகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தியும் கடந்த (17.02.2023 ) காலை 10 மணியளவில் பிரித்தானிய இல்லத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப்பயணம் கடந்த 1ம் திகதி மாலை சுவிஸ் நாட்டை வந்தடைந்தது.

அதன் தொடர்ச்சியாக சுவிஸ் நாட்டின் பாசல் மாநிலத்தின் எல்லையில் இருந்து ஆரம்பமாகிய ஈருருளிப்பயணம் பாசல்லாண்ட் ( Basel-Landschaft), சொலத்தூண் ( Solothurn ) மாநிலங்கள் ஊடாக 101 கிலோமீற்றர் தூரம் பயணித்து பேர்ண் (Bern) மாநிலத்தின் Schönbühl நகரில் நிறைவுக்கு வந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்றையதினம் காலை பேர்ண் (Bern) மாநிலத்தின் Schönbühl நகரில் ஆரம்பமாகிய ஈருருளிப்பயணம் Fribourg மாநிலத்தில் நிறைவுக்கு வந்தது. இன்றையதினம் காலை Fribourg மாநிலத்தில் ஆரம்பமாகவுள்ள ஈருருளிப்பயணம் வோ (Vaud) மாநிலத்தின் தலைநகராகிய லவுசானை (Lausanne) நோக்கி பயணிக்கவுள்ளது.

நீதி கோரிய பயணம் நாளையதினம் மாலை ஜெனிவா நகரில் உள்ள ஐ.நா முன்றலை சென்றடைய உள்ளது. சுவிஸ் நாட்டில் வசிக்கின்ற எம் உறவுகள் அனைவரும்
ஈருருளி பயணத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

எமது போராட்டத்தின் வெற்றி உலகத்தின் கையில் தங்கியிருக்கவில்லை; எமது வெற்றியானது எமது கையில், எமது பலத்தில், எமது உறுதிப்பாட்டிலேயே தங்கியிருக்கிறது. நாம் வலிமை பெற்றவர்களாக இருக்கவேண்டும் தளராத உறுதிபெற்றவர்களாக இருக்கவேண்டும்.

தமிழீழ தேசிய தலைவர்
மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments