நோர்வேயின் முன்னாள் படைவீரர்களுக்கு உளவியல் பாதிப்பு! ஆய்வுகளை மேற்கொள்ளும் நோர்வே இராணுவம்!!

You are currently viewing நோர்வேயின் முன்னாள் படைவீரர்களுக்கு உளவியல் பாதிப்பு! ஆய்வுகளை மேற்கொள்ளும் நோர்வே இராணுவம்!!

ஆப்கானிஸ்தான் போர்க்காலப்பகுதியில் அங்கு நிலைநிறுத்தப்பட்டிருந்த நோர்வே இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற வீரர்களிடையே உளவியல் பாதிப்புக்கள் அவதானிக்கப்பட்டிருப்பதாக நோர்வே பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

பணியிலிருந்தது ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவவீரர்களிடையே அதிகரித்துள்ளதாக சொல்லப்படும் உளவியல் பாதிப்புக்கள் தொடர்பில் நோர்வே இராணுவம் ஆய்வுகளை மேற்கொண்டிருப்பதாக தெரிகிறது.

பல்வேறு உலக நாடுகளிலும் சமாதானப்படைகளாகவோ, அல்லது போர் நடவடிக்கைகளுக்காகவோ நிறுத்தப்பட்டிருந்த பல்வேறு நாடுகளையும் சேர்ந்த படைவீரர்கள், அவர்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்ட பின் பல்லாண்டுகள் கழித்து, உளவியல் தாக்கங்களுக்கு உள்ளாவது அதிகரித்துள்ள நிலையில், ஆப்கானிஸ்தான் போரில் பங்கெடுத்துக்கொண்ட டென்மார்க், நெதர்லாந்து மற்றும் நோர்வே வீரர்களிடையே காலம் கடந்த உளவியல் தாக்கம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

டென்மார்க்கிலும், நெதர்லாந்திலும் செய்யப்பட்ட ஆய்வுகளின்படி, ஆப்கானிஸ்தானில் போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, பணிக்காலம் முடிந்து நாடு திரும்பியபின், போர் தொடர்பான நினைவுகளிலேயே மூழ்கியிருப்பதால், நாளடைவில் அவர்களுக்கு உளவியல் பாதிப்புக்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் போரின் சுமார் 10.000 நோர்வே இராணுவத்தினர் பங்கெடுத்திருந்ததோடு, 10 வரையிலானவர்கள் அங்கு கொல்லப்பட்டுள்ளதோடு, தற்போதும் விசேட படைப்பிரிவில் பணியாற்றும் நோர்வே இராணுவத்தினர் ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள