நோர்வேயில் அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டன!

You are currently viewing நோர்வேயில் அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டன!

நோர்வேயின் அனைத்து திரையரங்குகளும், உடனடியாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மிக வேகமாக பரவிவரும் “கொரோனா” வைரஸின் பரம்பலை கட்டுப்படுத்தும் விதமாகவே திரையரங்குகள் ஆகக்குறைந்தது இரு வாரங்களுக்கு பூட்டப்படுவதாக, திரையரங்க சம்மேளனத்தின் இயக்குனர் “Guttorm Petterson” தெரிவித்துள்ளார்.

தலைநகர் ஒஸ்லோவின் மிகப்பிரபலமானதும், பழமையானதுமான மேடைநாடக அரங்கமான “Oslo National Theateret” உட்பட, பாரம்பரிய கலைகளை மேடையேற்றும் அரங்கங்கள் சென்றவாரம் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள