நோர்வேயில் ஒருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டால் ; சிகிச்சை முறை!

  • Post author:
You are currently viewing நோர்வேயில் ஒருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டால் ; சிகிச்சை முறை!

நோர்வேயில் ஒருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டால் அவருக்கு இவ்வாறு சிகிச்சையளிக்கப்படும்!

  • ஒரு உள்ளூர் மருத்துவ அலுவலகம் அல்லது மருத்துவமனைக்கு நோய்த்தொற்று அறிகுறிகளுடன் அல்லது நோய்த்தொற்று சந்தேகத்துடன் நோயாளிகள் வந்தால், அவர்கள் உடனடியாக நகராட்சி மருத்துவ அதிகாரியை தொடர்பு கொள்ள வேண்டும்.
  • நகராட்சி மருத்துவ அதிகாரி தொடர்ந்து பொது சுகாதார நிறுவனத்தில் (FHI) தொற்று கட்டுப்பாட்டு காவலரை அணுகவேண்டும்.
  • எடுக்கப்பட்ட மாதிரிகள் உள்ளூர் ஆய்வகத்திற்கு அல்லது FHI க்கு அனுப்பப்பட வேண்டும், அவ்வாறு அனுப்புமிடத்து விரைவாக, ஒரு சில மணி நேரங்களுக்குள் பகுப்பாய்வு செய்யப்பட்டு, பதில் அளிக்க வாய்ப்புள்ளது. அதுவரை தொடர்ந்து அனைத்து சோதனைகளும் FHI இன் குறிப்பு ஆய்வகத்தில் சோதிக்கப்பட்டு, அதன் பின்னரே இறுதி முடிவு அறிவிக்கப்படும்.
  • சோதனை முடிவு நேர்மறையானதாக இருந்தால், நகராட்சி மருத்துவரும், FHI யும் பாதிக்கப்பட்ட நபருடன் கடந்த 14 நாட்களாக தொடர்பு கொண்டிருந்தவர்களை கண்டறிந்து , அவர்களுக்கும் நோய்த்தொற்று அறிகுறிகள் உண்டா என ஆராய்ந்து அவர்கள் கண்காணிக்கப்படுவார்கள்.
  • நோய்வாய்ப்பட்ட நபருடன் நெருக்கமான தொடர்புடன் இருந்தவர்கள் வேலைக்குச் செல்வது, பள்ளி மற்றும் கடைகள் உள்ளிட்ட பயண மற்றும் சமூக தொடர்புகளை குறைக்கும்படி FHI ஆல் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    (இது வீட்டில் தனிமைப்படுத்தல் என்று அழைக்கப்படும்)
நோர்வேயில் ஒருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டால் ; சிகிச்சை முறை! 1

பாதிக்கப்பட்ட நபருக்கு இவ்வாறு சிகிச்சை அளிக்கப்படும்

கொரோனா வைரஸ் என சந்தேகிக்கப்படும் நோயாளிகள் தங்கள் நோயைப் பொறுத்து வீட்டில் தனிமைப் படுத்தப்படவேண்டும் அல்லது மருத்துவமனையில் சேர்க்கப் படவேண்டும்.

அவர்கள் ஒஸ்லோவில் உள்ள Ullevål மருத்துவமனையில் ஒரு பிரத்தியோக அறையில் தனிமைப்படுத்தப்படுவார்கள்,
அந்த அறை காற்று இழுக்கப்படும் வழியாகவோ அல்லது தாழ்வாரங்கள் வழியாகவோ எந்த ஒரு வைரஸ் துகள்களும் ஊடுருவ முடியாது வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் நோயாளி ஒருவர் அவசர அறையில் காத்திருக்க வேண்டியிருந்தால், அவர் ஒரு தனி அறையில் வைத்து சிகிட்சை அளிக்கப்படுவார் என்று FHI சுட்டிக்காட்டுகின்றது.

பாதுகாப்பு:- பிரத்தியோக அறைக்குள் செல்லும் சுகாதாரப் பணியாளர்கள் கண்ணாடி, கையுறைகள் மற்றும் சுவாசக் கருவிகள் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை அணிய வேண்டும்.

பார்வையாளர் வருகை:-. நோயாளியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் மற்றும் பார்வைக்கு வருபவர்கள் அனைவரினதும் வருகை முன்கூட்டி அறிவிக்கப் படவேண்டும்.

முகமூடிகள்:- நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றவர்களுக்கு தொற்று ஏற்படுவதைத் தடுக்க முகமூடியை பயன்படுத்தலாம், ஆனால் ஆரோக்கியமான மக்களுக்கு இது பரிந்துரைக்கப்படவில்லை என்று பொது சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டுகின்றது.

பகிர்ந்துகொள்ள