நோர்வேயில் மிக அதிகமானவர்கள் வேலையிழப்பு! “கொரோனா” அதிர்வுகள்!!

You are currently viewing நோர்வேயில் மிக அதிகமானவர்கள் வேலையிழப்பு! “கொரோனா” அதிர்வுகள்!!

இரண்டாம் உலகப்போரின் பின்னதாக மிகக்கூடிய வேலையிழப்புக்கள் நோர்வே முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

“கொரோனா” பரவலால் நாடு முடக்கநிலையை அடைந்திருக்கும் நிலையில், 24.03.20 நிலவரப்படி, “கொரோனா” பரவலின் பின்னதாக 2.91.000 பேர் வேலையிழந்தவர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக, சமூகநலவிடயங்களை கவனிக்கும் “NAV” அமைப்பு தெரிவித்துள்ளது.

இரண்டாம் உலகப்போரின் பின், அதிகளவில் மக்கள் வேலையிழந்துள்ளதாகவும், தலைநகர் ஒஸ்லோவிலேயே அதிகளவில் வேலையிழந்தவர்கள் பதிவுசெய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக, வர்த்தகத்துறை, சுற்றுலாத்துறை போன்றவற்றிலேயே அதிகளவான வேலையிழப்புக்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அதேவேளை, அரச மற்றும் நகரசபை நிர்வாகங்களின்கீழ் இயங்கும் துறைகளில் மிகக்குறைந்தளவு வேலையிழப்புக்களும் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள