நோர்வேயில் முதலாவது கொரோனா தொற்று! : FHI

  • Post author:
You are currently viewing நோர்வேயில் முதலாவது கொரோனா தொற்று! : FHI

நோர்வேயில் Tromsø நகரில் முதலாவது கொரோனா தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார நிறுவனம் (Folkehelseinstituttet) கூறியுள்ளது.

தொற்றுக்கு ஆளானவர் மூலம் வேறு நபர்களுக்கு தொற்று பரவுவதற்கான வாய்ப்புக்கள் குறைவு என்று FHI இன் துறை இயக்குநர் லினா வோல்ட் (Line Vold) கூறியுள்ளார்.

நோர்வேயில் முதலாவது கொரோனா தொற்று! : FHI 1
Line Vold i FHI – FOTO: NRK

சீனாவில் கொரோனா தொற்று ஆரம்பித்த பகுதியில் இருந்து வீடு திரும்பியபின் குறித்த நபர் பரிசோதிக்கப்பட்டார் என்றும், குறித்த நபர் ஆரோக்கியமாக உள்ளார் என்றும் FHI இன் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரால் மற்றவர்களுக்கு தொற்று எற்படும் அபாயம் மிகவும் குறைவு என்று நிறுவனம் (FHI) கருதுகின்றது. இருப்பினும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அந்த நபர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு FHI இன் ஆலோசனையின் படி உள்ளூர் சுகாதார பிரிவினால் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார் என துறை இயக்குநர் லினா வோல்ட் (Line Vold) கூறியுள்ளார்.

ஆதாரம்/ மேலதிக தகவல்:- NRK

பகிர்ந்துகொள்ள