நோர்வேயில் 4,12,000 பேர் வேலையிழப்பு!

You are currently viewing நோர்வேயில் 4,12,000 பேர் வேலையிழப்பு!

நோர்வேயில் 412000 பேர்  வேலையை இழந்துள்ளனர் வேகமாக பரவிவரும் கொரோனா தொற்றுக்காரணமாக இந்த வேலையிழப்புகள் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது பெப்ரவரி மாதத்தில் 2,3 வீதத்தில் இருந்த வேலையிழப்பு கடந்த இருவாரங்களுக்குள்  13,4 வீதத்திற்கு அதிகரித்துள்ளது.

செய்திகள் மேலும் தெரிவிக்கையில் வேலையிழப்பின் விகிதாச்சாரத்தில் இன்று வரை வரலாற்றில் இதுவே நோர்வேயில் மிக உயர்ந்த வேலையிழப்பு விகிதம் என பதிவுசெய்யப்பட்டுள்ளது.

நோர்வையில் 1991 ஆம் ஆண்டு 1000 இலட்சம் பேருக்கு வேலையிழப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது அதனைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் கடந்து அது 5 சதவிகிதத்தை எட்டியது.

1993 இல் வேலையிழப்பு 5.5 சதவீதமாக பதிவுசெய்யப்பட்டது இதில் 119,000 பேர் முற்றிலும் வேலையில்லாமல் இருந்தனர்.

இதேவேளை விக்கிபீடியா தகவலின்படி நோர்வேயில் 1930 முதல் 1931 வரை வேலையிழப்பு பெரும் மந்தநிலையில் இருந்தபோது மொத்த வேலையின்மை 1930 ல் 6.4 ஆக இருந்தது, 1931 இல் 10.4 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று நோர்வே பொருளாதாரப் பள்ளியின் பேராசிரியர் ஓலா கிரிட்டன் கணக்கிட்டுள்ளார். என VG பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள