நோர்வே அரசியலில் மீண்டும் களமிறங்கும் சிங்கப்பெண் “Gro Harlem Brundtland”

You are currently viewing நோர்வே அரசியலில் மீண்டும் களமிறங்கும் சிங்கப்பெண் “Gro Harlem Brundtland”

நோர்வேயின் அரசியலிலிருந்து விலகியிருந்த, நோர்வேயின் முன்னாள் பிரதமர் திருமதி. “க்ரூ ஹார்லெம் ப்ருன்ட்லாண்ட் / Gro Harlem Brundtland” அம்மையார், மீண்டும் நோர்வே அரசியலில் களமிறங்குவதாக அறிவித்துள்ளார்.

தற்போது 83 வயதாகும் அம்மையார், 1974 இலிருந்து 1976 வரை நோர்வேயின் சுற்றுச்சூழல் அமைச்சராகவும், 1981, 1986 – 1989 மற்றும் 1990 – 1996 ஆகிய காலப்பகுதிகளில் நோர்வேயின் பிரதமராகவும், பின்னதாக நோர்வே அரசியலிலிருந்து விலகிய பின்னர், உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) தலைவராகவும் பணியாற்றியவர்.

நோர்வேவேயின் தொழிலாளர் கட்சி (Arbeiderpartiet / Ap) இன் தலைவராக இருந்து, நாட்டின் பிரதமராகவும் இவர் கடமையாற்றிய காலம் நோர்வேயின் பொற்காலம் என குறிப்பிடக்கூடியது. இந்திரா காந்தி அம்மையார், மார்கிரட் தட்சர் அம்மையார் வரிசையில் அரசியல் இரும்புப்பெண்மணி என புகழப்பட்ட இவர், அரசியலிலிருந்து ஒதுங்கியதும் இவர் தலைமை தாங்கிய தொழிலாளர் கட்சி பெரும் வீழ்ச்சியை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அம்மையாருக்கு பின்னதாக உறுதியான தலைவர்கள் இல்லாமல் கட்சி தள்ளாடிய நிலையில், பல்லாண்டுகளாக நேர்வேயின் அரசை தன்வசம் வைத்திருந்த தொழிலாளர் கட்சி வலுவிழந்து, ஆட்சியை பறிகொடுத்து அதல பாதாளத்தில் வீழ்ந்திருந்தது.

பல்லாண்டுகளுக்குப்பிறகு தட்டுத்தடுமாறி மீண்டும் ஆட்சி பீடமேறியிருக்கும் தொழிலாரர் கட்சி, கட்சியின் உட்பூசல்களால் நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் நிலையில், அம்மையாரது வரவு கட்சிக்கு புத்துயிர் கொடுப்பதோடு, மீண்டும் நோர்வே அரசியலில் தனியான இடத்தை பெறுமெனவும் எதிர்வுகள் கூறப்படுகின்றன. எதிர்வரும் பொதுத்தேர்தலில் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு அம்மையார் சம்மதம் தெரிவித்துள்ளதாக, திருமதி. “க்ரூ ஹார்லெம் ப்ருன்ட்லாண்ட் / Gro Harlem Brundtland” அம்மையாரின் தொடர்பாளர் அறிவித்துள்ளதாக நோர்வே ஊடகச்செய்திகள் தெரிவிக்கின்றன.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments