நோர்வே அரசு, ஒதுக்கீட்டு முறைமை அகதிகள் பரிமாற்றை நிறுத்தியுள்ளது!

  • Post author:
You are currently viewing நோர்வே அரசு, ஒதுக்கீட்டு முறைமை அகதிகள் பரிமாற்றை நிறுத்தியுள்ளது!

கொரோனா வைரஸ் மேலும் பரவுவதைக் கட்டுப்படுத்த நோர்வே அரசு மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக, ஒதுக்கீட்டு முறைமை அகதிகள் பரிமாற்றம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதை கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சகம் (Kunnskapsdepartementet) இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

2020 ஆம் ஆண்டில், சுமார் 200 நகராட்சிகளில், மொத்தம் 5120 அகதிகளை குடியேற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது என்றும், குடியேற்றப்பட வேண்டியவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பரிமாற்ற முறைமையில் அகதிகளாக இருப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, நோர்வேயில் சுமார் 750 இடமாற்ற முறைமை அகதிகளுக்கு குடியிருப்பு அனுமதியும், நகராட்சிகளில் குடியேற்ற இட ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது, ஆனால் அவர்கள் இதுவரை நோர்வேக்குள் வரவில்லை. இவர்களுக்கான நுழைவு அனுமதி தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சகம் மேலும் கூறியுள்ளது.

ஆதாரம்/ மேலதிக தகவல்: VG

பகிர்ந்துகொள்ள