நோர்வே நிலச்சரிவில் இதுவரை பலியானவர்கள் பெயர்கள் வெளியிடப்பட்டன!

You are currently viewing நோர்வே நிலச்சரிவில் இதுவரை பலியானவர்கள் பெயர்கள் வெளியிடப்பட்டன!

நோர்வேயின் கிழக்குப்பகுதியில், தலைநகர் ஒஸ்லோவை அண்டிய “Gjerdrum” பகுதியில் 30.12.2020 அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் புதையுண்டு பலியான 7 பேர்களது பெயர்களை காவல்துறை வெளியிட்டுள்ளது.

சதுப்பு / களிமண் பிரதேசத்தில் புதையுண்ட நிலையில் வீடுகளின் இடிபாடுகளுக்கிடையில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட 7 சடலங்களையும் பிரேத பரிசோதனைகளுக்கு உள்ளாக்கி, பூர்வாங்க விசாரணைகள் முடிவுற்ற பின்னரே அவை பற்றிய விபரங்கள் அறிவிக்கப்படுமென காவல்துறை முன்னதாக அறிவித்திருந்த நிலையில், இப்போது அறுவர் பெயர்கள் மாத்திரம் வெளியிடப்பட்டுள்ளன.

நோர்வே நிலச்சரிவில் இதுவரை பலியானவர்கள் பெயர்கள் வெளியிடப்பட்டன! 1
Lisbeth Neraas (54) மற்றும் அவரது மகன் Marius Brustad (29)
நோர்வே நிலச்சரிவில் இதுவரை பலியானவர்கள் பெயர்கள் வெளியிடப்பட்டன! 2
Bjørn – Ivar Jansen (40), 8 மாத கர்ப்பிணியான Charlot Grymyr Jansen (31) மற்றும் இவர்களது மகள் Alma Grymyr Jansen (02)
நோர்வே நிலச்சரிவில் இதுவரை பலியானவர்கள் பெயர்கள் வெளியிடப்பட்டன! 3
Eirik Grønolen (31)
நோர்வே நிலச்சரிவில் இதுவரை பலியானவர்கள் பெயர்கள் வெளியிடப்பட்டன! 4
Irene Ruud Gundersen (69)

ஆகியோரே இதுவரை அடையாளம் காணப்பட்டவர்கள் ஆவார்கள். இன்னும் இரு சடலங்கள் அடையாளம் அடையாளம் காணப்பட வேண்டிய நிலையில், இன்னமும் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும் மூவரது நிலை பற்றிய தகவல்கள் இன்னமும் கிடைக்கப்பெறவில்லை.

பகிர்ந்துகொள்ள