நோர்வே மக்களுக்கு நோர்வே மன்னர் உரை! நிலைமைகள் தொடர்பாக மன்னர் கவலை!!

You are currently viewing நோர்வே மக்களுக்கு நோர்வே மன்னர் உரை! நிலைமைகள் தொடர்பாக மன்னர் கவலை!!

நோர்வே மன்னர் “Harald” அவர்கள், சற்றுமுன்னர், நாட்டு மக்களுக்காக உரையாற்றியுள்ளார்.

ஜோர்தானுக்கான அரசுமுறைப்பயணமொன்றை முடித்துவிட்டு சென்றவாரம் நாடு திரும்பிய மன்னர், பாதுகாப்புக்கரணங்களுக்காக தனிமையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், தனது அரசகுடும்ப வாசஸ்தலங்களில் ஒன்றான “Kongeseteren” என்னுமிடத்திலிருந்தபடியே நட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார்.

“கொரோனா” பரவலால் நாட்டில் எழுந்துள்ள அசாதாரண நிலைமையையிட்டு பெரும் கவலை கொண்டுள்ளதாக தெரிவித்திருக்கும் மன்னர், “கொரோனா” வைரஸ் தாக்கம் தொடர்பில் நாட்டு மக்கள் பயம் கொண்டிருப்பதை தான் நன்கு புரிந்துகொண்டுள்ளதாகவும், “கொரோனா” பரம்பலை தடுப்பதற்கு அனைவரும் ஒத்திசைவாக கடமையாற்றவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது தோன்றியுள்ள நிலைமையை கவனத்தோடு கையாள்வதற்காக அரசுக்கும், அமைச்சர்களுக்கும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும், நன்றிகளையும் தெரிவித்திருக்கும் மன்னர், 24 மணிநேரமும் தொடர் போராட்டத்தில் உழைத்துக்கொண்டிருக்கும் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கும் விசேட நன்றிகளை தெரிவித்துள்ளதோடு, பொருளாதார வீழ்ச்சிக்குள்ளாகியிருக்கும் அனைவருக்குமான தனது வேண்டுதல்களையும் பகிர்ந்துகொண்டுள்ளார்.

https://www.vgtv.no/193959?jwsource=cl

பகிர்ந்துகொள்ள