பயணிகள் விமானத்தை தாக்கியது ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணையா! அமெரிக்கா சந்தேகம்!

  • Post author:
You are currently viewing பயணிகள் விமானத்தை தாக்கியது ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணையா! அமெரிக்கா சந்தேகம்!

கனடா உள்ளிட்ட சில நாடுகள், ஏவுகணை தாக்கி தான் விமானம் வீழ்த்தப்பட்டது என கூறியுள்ளது. இது தொடர்பான விசாரணையை ஈரான் தொடங்கியுள்ளது. 

இந்நிலையில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட டோர்-எம் 1 ஏவுகணையிலிருந்து வெளியான சிதறல்கள் பற்றிய தகவல்களை விசாரிப்பதாக உக்ரேனிய அரசு கூறி உள்ளது.

நேட்டோவால் எஸ்.ஏ -15 கவுன்ட்லெட் என்று அழைக்கப்படும் டோர், ஒரு குறுகிய தூர  பாதுகாப்பு அமைப்பாகும், இது ஏவுகணை மற்றும் ரேடார் ஒன்றிணைந்த  வாகனமாக உள்ளது.

இது 6,000 மீட்டர் (20,000 அடி) உயரத்திலும், 12 கிமீ (7.5 மைல்) உயரத்திலும் உள்ள இலக்குகளுக்கு எதிராக  தாக்குதல் நடத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் விமானம் ஏவுகணையால் தாக்கப்பட்டதாக கூறப்படுவதை ஈரான் மறுத்து உள்ளது.

அதேபோல் ஏவுகணை தாக்குதலில் தான் தெஹ்ரானிலிருந்து புறப்பட்ட உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகளும் சந்தேகம் எழுப்புகிறார்கள்.

செயற்கைக்கோள் புள்ளிவிவரங்கள் படி அமெரிக்க  அதிகாரி ஒருவர் கூறுகையில், உக்ரேனிய சர்வதேச விமானம் போயிங் 737-800 விமானம் தெஹ்ரானில் இருந்து புறப்பட்ட இரண்டு நிமிடங்கள் வான்வழியில் இருந்தது. அதைத் தொடர்ந்து விமானத்தின் அருகே ஒரு வெடிப்பு ஏற்பட்டது. பின்னர் விமானம் கீழே சென்று தீப்பிடித்ததைக் காட்டியது என கூறினார்.

தெஹ்ரான் விமான நிலையத்திற்கு அருகே ஈரானிய ஏவுகணை ஒரு விமானத்தைத் தாக்கியதைக் காண்பிக்கும் ஒரு  வீடியோ என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது.

புலனாய்வு வலைத்தளமான பெல்லிங்காட்டின் ஆராய்ச்சியாளரான ஜியான்கார்லோ பியோரெல்லா, தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் விமான விபத்து நடந்த இடத்தில் கனரக இயந்திரங்களை பயன்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் புதிய வரவாக பிரான்ஸ் நுழைந்துள்ளது. பிரான்ஸ்  வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஈரானில் நடந்த உக்ரைன் விமான விபத்து தொடர்பான விசாரணையில் தாங்கள் பங்கேற்போம் என அறிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள