பருத்தித்துறை அரச பேருந்து டிப்போவிற்கு இறுதி எச்சரிக்கை!!!!

You are currently viewing பருத்தித்துறை அரச பேருந்து டிப்போவிற்கு இறுதி  எச்சரிக்கை!!!!


வழமையாக பருத்தித்துறையிலிருந்து வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்கு இறுதி பேருந்தாக மாலை 6.00 மணிக்கு பருத்தித்துறை டிப்போவின் பேருந்தானது செல்வது வழமை

ஆனால் நேற்றையதினம் அண்ணளவாக 30 பயணிகள் அந்த பேருந்திற்கு காத்திருந்த போதும் உரிய பயண நேரம் கடந்தும் அந்த பேருந்து தனது பயணத்தை மேற்கொள்வதற்கு டிப்போவிலிருந்து வருகை தரவில்லை

இது தொடர்பாக அங்கு இருந்த மக்கள் பருத்தித்துறை டிப்போவிற்கு அழைப்பினை எடுத்து முறைப்பாட்டை தெரியப்படுத்தியதும் டிப்போ சார்பில் ஒருவர் வந்தார்

பேருந்து வருகை தராமைக்காக கிடைத்த காரணம்… 👇👇👇

நேற்றைய தினம் காலை எமது பிரதேசத்திற்கு வருகை தந்த அதே பேருந்து இயந்திர கோளாறு ஏற்பட்டு இடையில் சிரமப்பட்டதால் பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இது மிகவும் பழைய பேருந்து அடிக்கடி கோளாறு ஏற்படுகின்றது ஒழுங்கான ஒரு பேருந்து கிடைத்தால் செல்கின்றோம் என்று கூறி உரிய நேரத்திற்கு பேருந்தை எடுத்து செல்ல மறுப்பு தெரிவித்தனர்.

🔴 அவர்கள் கூறிய காரணம் உண்மைதான் வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்கு வேறு ஓட்டுனர்கள், டிப்போக்களால் ஒதுக்கப்பட்ட பழைய பேருந்துகள் மட்டுமே காலகாலமாக அனுப்பப்படுகின்றன

🔴ஆனால் இப்போது வீதியில் ஒரு நல்ல பேருந்து ஓடுவதற்கு இடையூறான பிரச்சினைகள் இல்லை வீதிகளால் பேருந்து பழுதடைய வாய்ப்பு மிகவும் குறைவு.

🔴 நேற்று ஓட்டுனர் பேருந்தை எடுக்க மறுத்தால் உடனடியாக டிப்போ நிர்வாகிகள் மாற்று ஒழுங்கு செய்திருக்க வேண்டும் பயணிகள் இங்கிருந்து அழைக்கும் வரை அவர்கள் காத்திருக்கின்றனர் என்பதை அறிந்தும் எந்த தகவலும் அவர்கள் வழங்கவில்லை
அந்த நேர பேருந்தில் தனியார் வகுப்புக்களுக்கு செல்லும் பாடசாலை மாணவர்கள், பெண் பிள்ளைகள் முதியவர்கள் வழமையாக செல்வதும் அவர்கள் காத்திருப்பதும் இவர்கள் அறிந்ததே.

🔴 பயணிகள் சற்று குழப்பமடைய ஆரம்பித்ததும் பிரச்சினை வரப்போவதை உணர்ந்த டிப்போ நிர்வாகம் கீரிமலையில் இருந்து வருகை தந்த பேருந்தை பயணிகளை ஏற்றி செல்லுமாறு கேட்கவும் அந்த பேருந்தின் ஓட்டுனர் மறுத்தார் ஆனால் அந்த பேருந்தின் நடத்துனர் மக்களின் நிலையை கண்டு ஒப்புக்கொண்டதை அடுத்து பிறிதொரு ஓட்டுனரின் உதவியுடன் பேருந்து இரவு 07. 30 இற்கு பிறகு புறப்பட்டது.

🤷 சரி தான் எப்பிடியோ அவர்கள் பேருந்தை ஒழுங்கு செய்துவிட்டார்கள் தானே இப்போ என்ன பிரச்சினை என்று கேட்பவர்களுக்கான பதில் 👇👇👇

பருத்தித்துறை டிப்போ மீது முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் 👇👇👇

🔴 6.00 மணிக்கு செல்ல வேண்டிய பேருந்து எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஒன்றரை மணித்தியாலங்களின் பின்பு சென்றது யாருடைய தவறு ?

🔴 அடிக்கடி பழுதடையும் பழைய பேருந்துகளை எமது பிரதேசத்திற்கு அனுப்புவது ஏன்?

🔴 அந்த பேருந்தின் ஓட்டுனர் மறுத்தவுடன் மறு ஒழுங்கு செய்யாமல் மக்கள் குழப்பமடைந்து கேள்வி கேட்கும் வரை எங்களுக்கு என்ன? என்று அமைதியாக இருந்தமை

🔴 நேற்றைய தினம் அது எங்களுடைய வேலை இல்லை என்று அந்த ஓட்டுனரும், நடத்துனரும் மறுத்திருந்தால் பயணிகளின் முடிவு என்ன?

🔴 ஒரு வழி பயணத்தில் (பருத்தித்துறை தொடக்கம் கேவில் வரை) 40 KM இற்கு அதிகமாக பயணம் செய்யும் பாதை உடைய பிரதேசத்தின் பேருந்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமையின் காரணம் என்ன?

🔴 காலகாலமாக பருத்தித்துறை டிப்போவின் பேருந்துகள் உரிய நேரத்திற்கு செல்வதில்லை
ஓட்டுனர்கள் தமது விருப்பிற்கு செல்வது
முன்னறிவிப்பு இன்றி நேரங்களை மாற்றம் செய்வது
இதனால் அடிக்கடி பயணிகள் பேருந்தை தவறவிடுவதுண்டு

🔴 பல தடவைகள் மக்களால் நேரில் சென்று கோரிக்கைகள் வைத்தும் இதுவரை நிறைவேற்றப்படாமல் இருப்பதற்கான காரணம் என்ன ?

🔴 வடமராட்சி கிழக்கின் இறுதி எல்லை கிராமமான கேவிலுக்கு பேருந்துகள் செல்வதில்லை நீண்டகாலமாக மக்கள் பாதி வழியில் இறங்கி நடந்து செல்கின்றனர்
இது தொடர்பாக பல தடவைகள் நேரடியாக டிப்போவை தொடர்பு கொண்டும் பயன் கிடைக்கவில்லை
ஒரு தடவை கேட்டதன் பின்பு மட்டும் ஒரு சில நாட்கள் இறுதி வரை சென்றனர் பின்பு நிறுத்தப்பட்டு விட்டது

டிப்போ நிர்வாகம் இப்படி கவனத்தில் எடுக்காமல் இருக்க பேருந்து ஓட்டுனர்கள் சொல்லும் காரணம் அந்த கிராமத்திற்கு செல்லும் வீதி மட்டும் சரியில்லை அதை பயன்படுத்தினால் பேருந்தின் வில்லுத்தகடு உடையும் என்பது
ஆனால் ஒரு சில நாட்கள் உங்களுடைய பேருந்து பயணித்த காலங்களில் ஒருதடவை கூட வில்லுத்தகடு உடையவில்லையே
இப்போது கூட யாழ்ப்பாணத்தில் இருந்து வருகைதரும் தனியார் பேருந்துகள் எந்தவித பிரச்சினைகளும் இல்லாமல் பயணிக்கின்றன.
( கேவில் கிராமத்திற்கு யாழ்ப்பாணத்தில் இருந்து வருகை தரும் தனியார் பேருந்துகள் மட்டுமே செல்கின்றன
பருத்தித்துறை தனியார் பேருந்துகள், யாழ்ப்பாணம் அரச பேருந்துகள் பருத்தித்துறை அரச பேருந்துகள் எதுவுமே செல்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது )

( எமது பிரதேசத்தில் மட்டுமே இவ்வளவு பிரச்சினைகள் என்றால் மற்றைய இடங்களில் இன்னும் அதிகமாகவே இருக்கும் )

🔴 பருத்தித்துறை டிப்போவிடம் முன்வைக்கும் கோரிக்கைகள் 👇👇👇

👉 வீதிகள் ஒழுங்காக இருப்பதால் ஓட்டுனர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய மற்றும் பயணிகள் கொடுக்கும் பணத்திற்கு தகுந்த திறன் வாய்ந்த பேருந்துகள் வேண்டும்

👉 அவை உரிய நேரத்திற்கு பயணித்தல் வேண்டும்

👉 பயண நேரம் மாற்றியமைப்பதாயின் முன்னறிவிப்பு கொடுத்தல் வேண்டும்

👉 இறுதி கிராமமான கேவில் வரை பேருந்து கட்டாயமாக பயணிக்க வேண்டும்
அங்கிருந்தே பயணத்தை தொடரவும் வேண்டும்

👉 நேற்றைய தினம் நடந்தது போல் ஒருதடவை கூட இனிமேல் நிகழாது என்று வாக்குறுதி வழங்க வேண்டும்

🔴 விரைவில் பருத்தித்துறை டிப்போவிற்கு இந்த சம்பவத்தையும் மக்களின் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளையும் உள்ளடக்கிய கடிதம் ( பிரதேசத்தில் இருந்து பல நபர்கள் பலதடவை இவர்களை நேரில் சந்தித்து தொடர்பு கொண்டும் எந்த பயனும் இல்லை நானும் எனது நண்பனும் கூட சென்று கோரிக்கை வைத்திருந்தோம்
இவற்றிற்கு எந்த பயனும் இல்லை அதனால் தான் ஆதாரத்துடன் கடிதம் ) ஒன்றை பிரதேச குடிமகன் என்ற ரீதியில் உத்தியோகபூர்வமாக அனுப்புவேன் ( கடிதத்தின் பிரதிகள் போக்குவரத்து அமைச்சு முதல் ஆளுனர் அலுவலகம் வரைக்கும் மற்றும் உரிய துறை சார்ந்த அனைத்து அலுவலகங்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் அனுப்பப்படும் ) கடிதம் அனுப்பப்பட்டு அதிகபட்சமாக 20 நாட்களுக்குள் இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் போனால்

வடமராட்சி கிழக்கு இளைஞர்கள், நலன் விரும்பிகள் மற்றும் பொது மக்களின் ஆதரவுடன் மிகவும் பாரதூரமாக போராட்டம் ஒன்று பருத்தித்துறை டிப்போவை முற்றுகையிட்டு தீர்வு கிடைக்கும் வரை நிகழும் என்பதை பருத்தித்துறை டிப்போ நிர்வாகத்தினரிக்கு எச்சரிக்கின்றேன்!!!

                          - வி ஜெ நிதர்சன் -
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments