பலரையும் வியக்கவைத்த கனடா வாழ் தமிழ் பெண்மணி!

You are currently viewing பலரையும் வியக்கவைத்த கனடா வாழ் தமிழ் பெண்மணி!

கனடாவிற்கு புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணொருவர் யாழில் அவருக்குச் சொந்தமாக உள்ள காணியை காணியற்றோருக்கு பகிர்ந்தளித்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாழில் வேலணை – கரம்பொன் மேற்கை சொந்த இடமாகக் கொண்ட வரதா சண்முகநாதன் என்பவரே தனக்கு சொந்தமான காணியை 9 குடும்பங்களுக்கு தலா 2 பரப்பு வீதம் பகிர்ந்தளித்துள்ளார்.

பகிர்ந்தளிக்கப்பட்டோருக்கான காணி உறுதி வழங்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை (18-02-2023) மேலைக் கரம்பொன் முருகமூர்த்தி ஆலய மண்டபத்தில் அப்பகுதியின் கிராம சேவையாளர் புருசோத்தமன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் வரதா சண்முகநாதனை பின்பற்றி புலம்பெயர் நாடுகளில் வாழ்பவர்கள் காணியற்றோருக்கு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனடாவில் வசித்துவரும் இலங்கையரான வரதா சண்முகநாதன் தமது 87வது வயதில் யோர்க் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றவர் ஆவார்.

இதற்காக ஒன்டாறியோ மாகாண நாடாளுமன்றம் அவரை கௌரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments